பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

584

Thermit : மீவெப்ப அழுத்த முறை பற்ற வைப்பு: அழுத்த முறையில் பற்ற வைக்கும் இதில் தெர்மிட் விளைவு உண்டாக்கும் திரவப் பொருட்கள் மூலம் வெப்பம் பெறப்படுகிறது.

Thermit welding : மீவெப்பூட்டி பற்ற வைப்பு: அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு) பற்ற வைப்பு முறை, இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின் போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை, கீறல்களை நிரப்பப் பயன்படுகிறது.

Thermo - couple : (மின்.) வெப்ப மின்னாக்கி: இது ஒரு வகை மின்னாக்கி. வெவ்வேறான இரு உலோகங்களால் ஆன தண்டுகள் அல்லது வயர்களை ஒன்றாகப் பற்ற வைத்த பின்னர் இவ்விதம் இணைந்த பகுதியைச் சூடேற்றினால் தண்டு அல்லது வயர்களின் மறுமுனையில் மின்சாரம் தோன்றும். மிகுந்த வெப்பத்தை அளிக்கும் அதி வெப்பமானிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

Thermodynamics : (பொறி.) வெப்ப இயக்கவியல்: வெப்பத்தை ஆற்றலின் வடிவமாக அல்லது வேலைக்கான ஒரு சாதனமாகக் கருதி ஆராய்கிற அறிவியல் பிரிவு,

Thermoelectric metals : வெப்ப மின் உலோகம்: உயர் வெப்பத்தை அளவிடுவதற்காக வெப்ப இணைப்பிகளில் பயன்படுத்தப்படு

கிற உலோகங்கள் அல்லது உலோகங்கள் அல்லது கலோகங்கள். பிளாட்டினம், நிக்கல், தாமிரம், ரேடியம் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

Thermograph: (வானூ.) வெப்ப அளவுக் கருவி: வெப்ப அளவைப் பதிவு செய்யும் கருவி.

Thermometer: வெப்பமானி: வெப்பநிலையிலான மாற்றங்களை அளவிடுவதற்கான அளவீட்டுக் கருவி.

Thermonuclear Reaction : (வேதி.) அணுக்கருப் பிணைப்பு விளைவு: எடை குறைந்த இரு அணுக்கருக்கள் ஒன்றாக இணைந்து எடை கூடிய அணுவாக மாறும்போது மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்துகிற விளைவு.

Thermopile (மின்.) கதிரியக்க வெப்பக்கூற்றுமானி: வெவ்வேறான பொருட்களை மாற்றி மாற்றி வரிசையாக ஒரு தொகுப்பாக அமைத்து இந்த இணைப்புகளைச் சூடேற்றினால் மின்சாரம் உற் பத்தியாகும்.

Thermoplastics: (குழை.) உருகு குழைமம்: குழைமக் (பிளாஸ்டிக்) குடும்பத்தில் (காண்க. பிளாஸ்டிக்) ஒரு வகை. இக் குடும்பத்திலான ஒரு வகைப் பிசின் பொருளை மீண்டும் மீண்டும் வெப்பமேற் றி வடிவை மாற்றலாம். குளிர்ந்த பின் அது உறுதியாகிவிடும்.