பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Thermoset: (குழை.) வெப்ப நிலைப்பி: ஒரு இரண்டாவது வகை பிளாஸ்டிக் பிரிவு. (காண்க பிளாஸ்டிக்) இந்த வகையின் கீழ் வரும் குடும்பங்களைச் சேர்ந்த பிசின்கள் ஒரு அச்சுக்குள் வைக்கப்பட்டு வெப்பமும், அழுத்தமும் செலுத்தப்படும்போது ஏற்படும் பினையால் வேதியியல் மாற்றங்களுக்கு உட்பட்டு அச்சுக்கு ஏற்ற வடிவைப் பெற்று, மீண்டும் உருக்க முடியாதபடி நிலைத்த நிலையைப் பெறுகிறது.

Thermosiphon system: (தானி.) வெப்ப வடி குழாய் ஏற்பாடு: இவ்விதக் குளிர்விப்பு முறையானது வெப்பநீர் மேலே செல்ல, குளிர்ந்த நீர் அடியில் நிற்கும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. என் ஜின் காரணமாக வெப்பமடையும் நீர் ரேடியேட்டரில் மேலுக்குச் சென்று குளிர்வடைந்து மீண்டும் கீழே வரும் போது ஒப்பு நோக்குகையில் குளிர்ந்து உள்ளது. பிறகு அது வெப்பமடைந்து மேலே செல்கிறது.

Thermostat: வெப்ப நிலைப்பி: வெப்ப அளவைத் தானாக ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கருவி.

Thermostatic: வெப்பச் சீர்நிலைக் கருவி: வெப்பச் சீர் நிலை (வெப்பமேற்று) நீராவி மூலம் வெப்பமேற்றும் முறைகளில் காற்றையும், படிவுத் திவலைகளையும், நீராவி வெளியேற வாய்ப்பின்றி ரேடியேட்டரிலிருந்து வெளியேற்றுதல் வெளி

50

585

யேற்று வால்வு எளிதில் ஆவியாகிற திரவம் நிரம்பிய இடைத் திரையினால் இயக்கப்படுகிறது. இது விரைவாக சுருங்கவோ, விரியவோ செய்கிறது.

Thermostatic element: வெப்பச் சீர்நிலைக் கோட்பாடு: வெப்பச் சீர் நிலை இயக்கி: குறிப்பிட்ட வெப்ப நிலையில் செயல்படுவதற்கென்றே உருவாக்கப்பட்ட இயக்கி அல்லது கருவியானது அக்குறிப்பிட்ட வெப்பத்தைப் பெறும்போது வால் வைத் திறக்கும் அல்லது மூடும். சுவிட்ச் அல்லது வேறு உறுப்புகளை இயக்கும். பொதுவில் இது சுருள் வடிவில் இருக்கும். அல்லது ஈதர் அல்லது வேறு திரவம் நிரப்பப்பட்டு இரு புறங்களிலும் சீலிடப்பட்ட வெற்று உலோகக் குழலாக வும் இருக்கலாம். விரியும்போது அல்லது சுருங்கும்போது ஒரு பட்டாம்பூச்சி வால்வை இயக்கும் இரு உலோகப் புயமாகவும் இருக்கலாம். இது அவ்வளவாகப் பயன் படுத்தப்படுவதல்ல.

Thickness gauge or feeler:(எந்.) பருமன் அளவுமானி: இது பேனாக்கத்தி போன்ற வடிவம் கொண்டது. இதன் விளிம்புகள் ஓர் அங்குலத்தில் ஆயிரத்தில் இவ் வளவு பங்கு என்ற அளவில் பருமன் வித்தியாசப்படும். மோட்டார் வாகன வால்வுகள் போன்ற உறுப்புகளில் இடைவெளி அளவை சரிப்படுத்தப் பயன்படுத்தப்படும்,

Thickness ratio: (வானூ.) திண்மை.விகிதம்: விமான இயக்க