பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

583

கட்டுப்பாட்டுப் பரப்புகளின் அதிக பட்ச பருமனுக்கும் அவற்றின் குறுக்குக் கோட்டுக்கும் இடையே உள்ள விகிதம்,

Thick space: (அச்சு.) தடிப்பு இடைவெளி: எந்த ஒரு குறிப்பிட்ட முகப்பிலும் மூன்று முதல் ஒரு 'யெம்' வரையில் அமைக்கப்பட்ட இடைவெளி,

Thimble: விரற்சிமிழ்: சிறுகுழாய்: (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப் படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல்.

(2) கயிறு அல்லது கேபிள் தேயாமல், பிரியாமல் இருப்பதற்காக அதன் நடுவே பொருத்தப்படுகிற குழிவுகள் கொண்ட வளையம்.

T hinge: (க.க.) T வடிவ கீல்: கிட்டத்தட்ட 'T' வடிவிலான கீல் பட்டையான அமைப்புடன் நேர் கோணத்தில் இணைந்த மற்றொரு பட்டையைக் கொண்டது. முக்கியமாக கதவு, கேட் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவது.

Thin space : (அச்சு.) மென் இடைவெளி: சொற்களிடையே ஐந்து முதல் ஒரு யெம் வரை அமைக்கப்பட்ட இடைவெளி.

Third - angle projection : மூன்றாம் கோண எடுப்புத் தோற்றம்: அமெரிக்காவில் பின்பற்றப்படுகிற

|

எந்திரவியல் வரைபடங்களில் வெவ்வேறு தோற்றங்களை எடுத்துக்காட்டல். பொதுவில் வரைபட அதாவது மேலிருந்து காட்சி, முன்பக்கக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, பின்புறக்காட்சி ஆகியவை எடுத்துக் காட்டப்படும். ஒவ்வொரு காட்சியும், எடுத்துக்காட் டப்பட்ட பக்கக்காட்சியின் பின்புலனாக வைத்துக் காட்டப்படும்.

Third brush : (தானி.) மூன்றாம் பிரஷ்: புலம் - சுற்று மின் ஒட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின்னாக்கியின் மின் உற்பத்தி அளவைக் கட்டுப்படுத்தும் துணை பிரஷ்.

Third - class sever : (எந்.) மூன்றாம் வகை நெம்புகோல்: விசையானது எடைக்கும் ஆதாரத் தானத்துக்கும் இடையே செலுத்தப்படும் நெம்புகோல்.

Thixotropic : (குழை.) திக்ஸோட்ரோபிக்: மிக நைசாகப் பொடி செய்த சிலிக்கா போன்ற கரையாத திடப்பொருட்கள் அடங்கிய திரவ பிளாஸ்டிக்குகள் கலத்தில் இருக்கும்போது பாகுபோல் இருக்கும். பரப்பில் பூசினால் திரவமாகி விடும். இவ்வகைப் பிசின் சரி வான பரப்பில் பூசப்பட்டால் வழிந்து இறங்காமல் பரப்பின் மீது நிலையாக இருக்கும்.

Thixotropy : (வேதி.குழை.) திக்ஸோட்ரோபி: சில சேர்மானங்கள் அசையா நிலையில் கூழ்மமாக