பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருந்து நன்கு கிளரும்போது திரவ நிலைக்கு உள்ளாகும் தன்மை,

Thread: நூல்: பட்டு, பருத்தி அல்லது கம்பளி போன்று வழக்கமாக உலோகமல்லாத பொருளால் ஆன மெல்லிய கயிறு அல்லது இழை.

Thread-cutting screws : (எந்.) புரிவெட்டும் திருகு: வரிவரியாக அமைந்த வெட்டுமுனை கொண்ட ஸ்குருக்கள் உள்ளே இறங்கும் போது புரிகள் வெட்டப்படும் இது புரி தண்டை தேவையற்றதாக்கு கிறது. உலோகத் தகடுகள், மென்மைக் கலோகங்கள், பிளாஸ்டிக் போன்றவற்றில் புரியிட ஏற்றது

Threaded sleeve : (பட்.) புரியிட்ட உறை: உலோகத்தால் ஆன உள்ளீடற்ற உறைகள். வழக்கமாக உருளை வடிவில் உட்புறம் புரியிடப்பட்டது. இரு தண்டுகள் அல்லது இரு குழாய்களை இணைப்பதற்குப் பயன்படுவது.

Thread gauge : (உலோ.வே.) புரியளவு மானி : திருகு புரிகளின் இடைவெளியைச் சோதிப்பதற்கான அளவுமானி,

Threading : புரியிடுதல்: உள்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில் திருகு புரிகளை அமைத்தல்.

Thread miller: (எந்.) புரி கடைசல் எந்திரம் : புரிகளை இடுவதற்

587

கும், வெட்டி வேலைப்பாடு செய்வதற்குமான கடைசல் எந்திரம்.

Thread plug (குழை.) புரி செருகு: உள்ளிடைப் புரிகளை உருவாக்குவதற்காகச் செருகப்படுகிற வார்ப்பு அச்சுப்பகுதி. வேலைக்குப் பிறகு வெளியே திருகி எடுக்கப்பட வேண்டியது.

Thread - rolling (எந்.) புரியமைத்தல்: ஒரு உலோகக் கட்டியில் உறுதியான உருளை அல்லது அச்சைச் செலுத்தி திருகுபுரிகளை அமைத்தல். அப்போது உள்ளிருந்து உலோகச் சுருள் துணுக்குகள் வெளிப்பட்டு உள்ளே புரிகள் அமையும். இவ்விதப் புரிகள் வலுவானவை; செலவு குறைவு.

Threads per inch : (எந்.) அங்குல வாரிப் புரி: இது புரியின் அளவைக் குறிப்பது. எந்த ஓர் குறுக்களவுக்கும் இவ்வளவு எண்ணிக்கையிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது 1/2 அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஒர் அங் குலக் குறுக்களவு அங்குலத்துக்கு 8 புரி. இப்படியாக புரிகளின் நோக்கம் (1) ஸ்குரூ போல்ட், நட்டு ஆகியவற்றை ஒன்றாக இருத்தி வைத்தல், (2) திரவம் அல்லது வாயுக்களின் அழுத்தத்தை அதாவது குழாய் இணைப்புகளின் உறுப்புகளை நன்றாக இறுக்கிப் பொருந்துதல், (8) ஜாக் ஸ்குரு பல் இணைப்பு செலுத்தி போன்றவை மூலம் விசையை செலுத்துதல், (4) மைக்ரோ மீட்டர், காலிபர் போன்ற