பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Threshold : (க.க.) தலைவாயில் : 1. ஒரு கட்டடத்தின் நுழைவு வாயில் 2. கதவுக்கு அடியில் அமைந்த மரப்பலகை, கல்பலகை, அல்லது உத்தரம்.

Throat ; (க.க.) கணப்புத் தொண்டை : கணப்பிலிருந்து புகை அறைக்குச் செல்லும் திறப்பு (எந்திர) துளை வெட்டும் எந்திரத்தில் வெட்டு கருவிக்குப் பின்னால் உள்ள இடைவெளி போடப்படும் துளையின் அளவு இந்த இடைவெளியின் ஆழத்தைப் பொருத்த்தது:

eThrottle : திராட்டில் : நீராவி போன்றதைக் கட்டுப்படுத்த அல்லது அடைத்து நிறுத்த, இதைச் செய்வதற்கான ஒரு கருவி.

Throttle valve : (எந்.) நீராவியைக் கட்டுப்படுத்தும் தடுக்கிதழ்: 1. மோட்டார் வாகன என்ஜினில் பெட்ரோலுடன் கலப்பதற்கு காற்று உள் புகுவதைக் கட்டுப் படுத்துவது போன்று, ஒரு குழாயில் அல்லது திறப்பில் முற்றிலுமாக அல்லது ஒரளவு மூடியபடி இருப் பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய பட்டையான தகட்டு வால்வு. 2. நீராவிக்குழாயில் நீராவி வருவதைக் கட்டுப்படுத்துவதற்கான வால்வு.

Through bolt: (எந்.) திருபோல்ட்: இணைக்கப்பட வேண்டிய பகுதிகளில் உள்ள துளைகளில் உள்ள இடைவெளி வழியே செல்கின்ற போல்ட் இணைப்புப் பகுதிகள்

589

முற்றிலும் நட்டுகளைப் பயன்படுத்தி முடுக்கப்படுகின்ற ன.

Through shake : மர உத்தரத்தில் வருடாந்திர வளர்ச்சி: வளையங்கள் இடையே உறுதியின்றி இருக்கின்ற இடைவெளி. உத்திரத்தின் இரு முகப் பகுதிகளிலும் இது நீண்டு அமைந்திருக்கும்.

Throw : (எந்.) விரை சூழல் இயக்கப் பொறி : ஒர் என்ஜினின் கிராங் ஷாப்டில் உள்ளது போன்று அச்சு மைய வேறுபாட்டு அளவு: இது பிஸ்டனின் அடியின் நீளத்தில் பாதிக்குச் சமம்.

Throwing: வனைதல்: மட்பாண்ட வனைவு சக்கரத்தில் ஒரு மண்கலத்துக்கு வடிவம் அளித்தல்.

Thrust bearing or thrust block: (எந்.) தள்ளு தாங்குதல் அல்லது குழை முட்டு: நீளவாட்டில் தள்ளு விசையைத் தாங்குகின்ற பொறி உறுப்பு.

Thrust collar: (எந்.) தள்ளு வளையம்: ஒரு தண்டின் மீது படிகிற அல்லது அதனுடன் இணைக்கப் பட்ட வளையம். தண்டு அல்லது அதன்மீது பொருத்தப்பட்ட பகுதிகளின் இயக்க விளைவுகளைக் குறைப்பது அல்லது தாங்கிக் கொள்வது இந்த வளையத்தை அமைப்பபதன் நோக்கம்.

Thumb nuts (எந்.) திருகுமரை: கட்டைவிரலாலும், ஆள்காட்டி