பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்று சேர்த்து கட்டி வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற அனைத்துப் பொருட்கள்.

Tight fit : (எந்.) அழுத்தப் பொருத்தம் : சிறிதளவு அழுத்தம் மூலம் செய்யப்படுகிற சரிபொருத் தம்.

Tight pulley : (எந்.) இறுக்கக் கப்பி : தண்டுடன் இணைக்கப்பட்ட கப்பி. இதற்கு மாறான அமைப்பில் தண்டுடன் இணையாமல் இருக்கிற கப்பியானது சுலபத் தில் சுழலும்.

Tile : (க.க.) ஒடு : மண். சிமெண்ட் அல்லது கண்ணாடியால் ஆனவை. கூரையில் அமைக்கப் பயன்படுத்தப்படுபவை. கலையம்சம் பொருந்திய டிசைன், நேர்த்தி ஆகியவற்றுடனும் தயாரிக்கப்பட்டு தரையிலும், சுவரிலும் பதிக்கப் பயன்படுபவை.

Tilt top table: சாய்ப்பு மேசை: பீடம் கொண்ட மேசை, இதன் மேல் பலகை கீல் கொண்டு பொருத்தப்பட்டுள்ளதால் கிடைமட்ட நிலையிலிருந்து செங்குத்து நிலைக்குக் கொண்டு வர இயலும்.

Timber: வெட்டுமரம்: மரம்: பல் வேறான வேலைகளுக்கு ஏற்ற வகையில் நீண்ட கட்டைகளாக சதுரப் பலகைகளாக அறுத்து வைக்கப்பட்டுள்ள மரம். காடுகளில் வெட்டப்பட்ட மரக் கட்டை

591

களிலிருந்து இவ்விதம் தயாரிக்கப்படுகிறது.

Timber trestle: (பொறி.) மரக்கட்டுமானம்: ஒடை அல்லது பள்ளங்கள் மீது ரயில்பாதை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற மரக் கட்டுமானங்கள். செங்குத்தாக, கிடைமட்டமாக, குறுக்காக மரக் கட்டைகளை அமைத்துக் கட்டப் படுபவை.

Time measure:கால அளவு: 60 வினாடி - 1 நிமிடம் 60 நிமிடம் – 1 மணி 24 மணி - 1 நாள் 7 நாள் - 1 வாரம் 28, 29, 30 - 1 காலண்டர் அல்லது 31 நாட்கள் மாதம் 30 நாள் - 1 வட்டி கணக்குக்கு ஒருமாதம் 52 வாரம் - 1 ஆண்டு 365 நாள் - 1 ஆண்டு 366 நாள் - 1 லீப் ஆண்டு

Timer: (தானி.) முன்னேற்பாட்டுக் கருவி: மோட்டார் வாகனத்தில் சிலிண்டர்களில் தக்க சமயத்தில் தீப்பொறி தோன்றும் வகையில் முதன்மை தீப்பற்று சர்க்கியூட்டைத் துண்டிப்பதற்குப் பயன்படும் கருவி.

Time switch: (மின்.) நேர ஒழுங்கு மின்விசை மாற்றுக்குமிழ்: கடிகாரத்தினால் கட்டுப்படுத்தப்பட்டு குறித்த நேரத்தில் இயங்கும் சுவிட்ச்.

Timing: (தானி. எந்.) காலத் திட்ட அமைப்பு: 1. மிகப் பயனுள்ள