பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தகட்டு வேலைக்காரர்கள் வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கையால் இயக்கும் கத்திரிக்கோல்.

Tint block : செதுக்குருப்பாளம் : டின்ட் பிளாக் (அச்சு) ஒரு திட வண்ணத்தை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு தட்டையான உலோகத்தால் ஆன அல்லது பிளாஸ்டிக் முகப்பு கொண்ட உலோகத் தகடு. பொதுவில் வண்ணம் லேசாக அல்லது அடிப்படை வண்ணத்துக்கு மாறுபாடு காட்டுவதாக இருக்கும்.

Tints : (வண்.) மென்னிறம் : லேசான நிறங்கள், குறிப்பாக ஒரளவு வெண்மை கலந்த நிறங்கள்.

Tip radius : (வானூ) நுனி ஆரம் : சுழல் அச்சிலிருந்து சுழலிப் பட்டையின் வெளி விளிம்பு வரையிலான தூரம்.

Tire bolt : பட்ட ஆணி : சக்கரத்தின் வெளிப்புற மரப்பகுதி மீது உலோகப்பட்டை பொருத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் துளையற்ற பட்டையான தலை கொண்ட போல்ட்.

Tire tool : (தானி.) டயர் மாற்றும் கருவி : மோட்டார் வாகன டயர்களை அகற்றுவதற்காகப் பயன்படும் இரும்பு அல்லது உருக்குப் பட்டை இவ்விதமான எந்த ஒரு கருவியையும் டயர் மாற்றும் கருவி எனலாம்.

51

593

Tissue manila: மெல்லிய மணிலா: உறுதியான நாரினால் ஆன மணிலா நிறமுள்ள மெல்லிய காகிதம்.

Tissue paper: மெல்லிழைத் தாள்: பல்வேறான தரம் கொண்ட மிக மெல்விய காகிதத்தைக் குறிப்பதற் குப் பயன்படும் சொல்.

Titanium: (உலோ.) டைட்டானியம்: கரிமக் குழுவைச் சேர்ந்த உலோகத் தனிமம். தாமிரம், வெண்கலம் மற்றும் இதர உலோகங்களுடன் சேர்த்து கலோகம் செய்யப் பயன்படுத்தப்படுவது, வெள்ளை வண்ணத்தில் டைட்டானியம் ஆக்சைட் முக்கிய பொருள். இதைப் பயன்படுத்தும் பெயிண்டுகள் மிக நன்கு உழைக்கின்றன.

Title block: தலைப்பு மூலை: ஒரு வரைபடத்தில் பொதுவில் வலது புறத்தின் கீழ் மூலையில் அல்லது கீழ்ப்புறம் நெடுக, கம்பெனியின் பெயர். வரைபடத்தின் தலைப்பு, அளவு அலகு, தேதி, மற்றும் தேவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

Title page: (அச்சு.) தலைப்புப் பக்கம்: ஒரு புத்தகத்தின் துவக்கத்தில் புத்தகத் தலைப்பு, நூலாசிரி யர் பெயர், வெளியிட்டவரின் பெயர் முதலியவை அடங்கிய பக்கம்.

T joint: T இணைப்பு: ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமை