பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

594

யும் வகையில் இரு இரும்புத்துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பற்றவைக்கப்பட்ட ஒரு வகை இணைப்பு (குழாய் வேலை). சாதாரண 3 வழி குழாய் இணைப்பு மேலும் கீழுமாக உள்ள நீண்ட குழாயில் நடுப்புறத்திலிருந்து இந்த இரண்டுக்கும் செங்கோணத்தில் மூன்றாவது குழாய் அமைந்திருக்கும்.

T.N.T Trinitrotoluol. (வேதி.) TNT டிராநைட்ரோடோலூவோல் (C7H5(NO2)3): நிறமற்ற நீர்ம ஹைட்ரோ கார்பனான டோலுவோலுடன் நைட்ரேட் சேர்ப்பு மூலம் உருவாக்கப்படும் வெடிப் பொருள். உருகுநிலை 80 டிகிரி சென்டிகிரேட் இந்த வெடிப் பொருள். அதிர்ச்சி மூலம் தீப்பற்று வதல்ல. எனவே ஒப்புநோக்குகையில் கையாள்வதற்கு ஓரளவில் பாதுகாப்பானது.

Tobin bronze : (உலோ.) டோபின் வெண்கலம்: தாமிரம், துத்த நாகம். ஈயம், இரும்பு, காரீயம் ஆகியவை கலந்த ஒரு கலோசத்தின் வர்த்தகப் பெயர். மிகுந்த இழுவலிமை கொண்டது. உப்பு நீரின் அரிமானத்தை நன்கு தாங்கி நிற்பது. எனவே கப்பலின் இணைப்புப் பகுதிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது.

Toe: (உலோ.வே.) விளிம்போரம்: ஒரு தண்டின் விளிம்பு ஒரம்.

Toe - in : (தானி.) முன்புறப் பொருத்து: மோட்டார் வாகனத்

தில் முன்புறச் சக்கரங்களைப் பொருத்துவது தொடர்பானது. பின்புறச் சக்கரங்களைவிட முன்புறச் சக்கரங்கள் 1/8 முதல் 1/4 அங்குல அளவுக்கு நெருக்கமாக இருக்கும். முன்டயர் தேய்மானத்தை குறைந்த பட்ச அளவுக்குக் குறைக்க இது தேவை. தவிர வண்டியை ஒட்டிச் செல்வது இதன் மூலம் சுலபமாகும் கார் வேகமாகச் செல்கையில் சக்கரங்கள் அகன்று அமைய முற்படும். முன்புறப் பொருத்து இதை சமப்படுத்துவதாக இருக்கும்.

Toeing : (மர. வே.) ஓரச் செலுத்து : ஒரு பலகையை மற்றொன்றுடன் இணைப்பதற்காக அப்பலகையின் ஒரு ஓரத்துக்கு அருகே ஆணிகளை சாய்வாக அடித்தல்.

Toenailing : (மர.வே.) பலகை மூலைச் சாய்வாணி; சாய்வு செலுத்து : ஆணிகளின் தலை வெளியே நீட்டியிராத வகையில் ஆணிகளை சாய்வாக அடித்தல். தரை அமைப்பதற்கு பலகைகளைப் பொருத்துவதற்கு செய்வதைப் போல.

Toe switch (தானி.) மிதி சுவிட்ச் : காரின் உள்புறத்தில் தரை போர்டில் அமைக்கப்பட்ட சுவிட்ச், காலால் மிதித்து அமுக்கினால் ஸ்டார்ட்டர் செயல்படும்.

Toggle : (எந்.) இறுக்கிப் பிடிப்பு : நடுவில் கீல் கொண்ட இரட்டை இணைப்பு.