பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

596

Tool box or tool head: (எந்.)வேலைக் கருவிப் பெட்டி: (மெஷின்)இழைப்பு எந்திரத்தில் வேலைக் கருவி இடம் பெற்றுள்ள குறுக்குப் புறத்துடன் தொகுத்து வைக்கப்பட்டுள்ள உறுப்புகள். கருவிக்கு வேலை அளிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

Tool holder tor lathe or plner: (பட்.) வேலைக்கருவி பிடிப்பான்: தண்டு அல்லது உருக்கினால் ஆன ஒரு துண்டு. வெட்டுவதற்கான வேலைக்கருவியை இத்தண்டுக்குள் செருக முடியும். மிக விலை உயர்ந்த உருக்கினால் ஆன வேலைக் கருவியையும் இவ்வகையில் பயன்படுத்தமுடியும். இப்பிடிப்பானை நகர்த்த வேண்டிய அவசியமின்றியே வேலைக்கருவியை அப்புறப்படுத்த முடியும்.

Tooling oalf: காரியக் கானா : பட்டை மூலம் பதனிடப்பட்ட தோல் புத்தக பைண்டிங் செய்யும் போது எழுத்துக்களைப் பதிக்கும் காரியத்துக்கு மிகச் சிறந்தது.

Tooling sheepskin: சிறு பொருள் ஆட்டுத்தோல் : விலை மலிவான நிறங்களில் கிடைக்கிற தோல், பர்ஸ், கார் செருகி, சாவி உறை முதலிய சிறுபொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுவது.

Tooling up; கருவிகளை ஆயத்தமாக்குதல் : ஒரு பொருளை நிறைய அளவில் உற்பத்தி செய்யும் முறை களைப் பயன்படுத்தும் நோக்கில் உற்பத்திக்குத் தேவையான

விசேஷக் கருவிகள், கட்டுமானச் சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ஆயத்தப்படுத்துதல்.

Tool, knurling: (பட்.) முகட்டுக் கருவி: மடிப்பு போன்ற பல முகடுகளைக் கொண்ட கருவியைக் கொண்டு சுழலும் உலோகப் பொருள் மீது பல வரிப்பள்ளஙகளை உண்டாக்குவது. அழகுக்காகவும். நல்ல பிடிப்புக்காகவும் இப்படிச் செய்யப்படும்.

Tool maker: (எந்.) வேலைக் கருவியாளர் : பணிச் சாதனங்கள், பொருத்திகள், அளவு மானிகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

Tool makers clamp; கருவியாளியின் திருகுபிடி: மரத் தச்சர் பயன்படுத்தும் திருகுபிடி போன்ற ஆனால் அதைவிடச் சிறிய வடிவிலான முற்றிலும் உலோகத்தால் ஆன பிடிப்புச் சாதனம்.

Tool post: (எந்.) தாங்கு கருவி: பற்றுக்கருவி; உச்சியில் வளையத்தைக் கொண்ட தம்பம்.கடைசல் எந் திரத்தின் மேற்புரத்தில் அமைந்த மரு இந்த வளையத்துக்குள் வெட்டுக் கருவி பொருத்தப்படும்.

Tool room: (எந்.)கருவி அறை : வேலைக்க்ருவி அறை: வேலைக் கருவிகள் சேயித்து வைக்கப்பட்டுள்ள அறை. இதிலிருந்துதான் தொழிலாளருக்கு கருவிகள் வழங்கப்படும். பணிச் சாதனங்கள் பொருத்திகள் போன்றவை தயா