பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரிக்கப்பட்டு, பழுதுபார்க்கப்படுகிற இடம்.

Tool steel: (உலோ.) வெட்டுக் கருவி உருக்கு: வெட்டுப் பகுதிகளாகப் பயன்படுத்துவதற்குத் தகுந்த ஏதேனும் ஒரு கரிம உருக்கு அல்லது அதிவேக உருக்கு.

Tool tip; (எந்,) கருவி முனை : பருமனான கார்பன் உருக்குக் தண்டின் மீது பற்ற வைக்கப்பட்ட அல்லது பித்தளையை உருக்கிச் சேர்க்கப்பட்ட கெட்டித்த கார்பைடினால் ஆன வெட்டும் துண்டு.

Tooth : காகித நேர்த்தி : கிரேயான் அல்லது பென்சிலைக் கொண்டு வரைவதற்கு உகந்த அளவுக்குக் காகிதம் கொண்டுள்ள நேர்த்தியைக் குறிப்பது.

Tooth face: (எந்.) பல் முகப்பு : கடைசல் எந்திர வெட்டு கருவியின் பரப்பு. பணியின் போது துண்டு வெட்டப் படுகையில் இப்பரப்பின் மீது தான் படுகிறது.

Toothing: (க.க.) சுவரின் பல் விளிம்பு: சுவர் போன்ற கட்டுமானத்தைக் கட்டுகையில் பின்னால் மேற்கொண்டு சுவரை விரிவு படுத்துவதானால் புதிதாக வைக்கிற செங்கற்களுக்குப் பிடிமானம் இருக்கவேண்டும் என்பதற்காக செங்கற்கனை மேலிருந்து கீழாக நீட்டியும் உள்ளடக்கியும் அமைப்பது.

Top: நீள் கம்பளி இழை: சிக்கு எடுக்கப்பட்டு கம்பளி நூலாக நூற்

|

597

பதற்காக உள்ள நீண்ட கம்பள ரோமம்.

Top dead center: (தானி.) சுழலா மேல் நிலை: முதல் நம்பர் பிஸ்டனின் கிலிண்டரில் பிஸ்டன் மேல் உச்சிக்கு வரும்போது உள்ள நிலை. இந்த நிலை பிளைவீலில் குறிக்கப்பட்டிருக்கும். என்ஜினின் உச்சபட்ச திறனுக்காக சரிப் பொருத்தம் செய்யும் போது இந்த நிலை கணக்கில் கொள்ளப்படும்.

Topping: மேல் வண்ணமூட்டல்: சாயமேற்றப்பட்ட துணியை இன்னொரு வண்ணம் கலந்த கரைசலில் முக்குவது.

Torque : (மின்.) திருப்பு விசை : சுழல் பகுதி திரும்பும் முயற்சி. (பொறி) விசையை அளிக்கையில் தண்டும் சேர்ந்து சுற்ற முற்படுவது.

Torque arm : திருப்புத் தடுப்புப் புயங்கள் : உந்து வண்டியில் பின்புற அச்சுக்கு விசை அளிக்கப்படு கையில் பின்புற அச்சின் உறைப் பெட்டியும் சேர்ந்து சுற்றாமல் தடுப்பதற்கு உள்ள இரு புயங்கள்.

Torque converter: (தானி.எந்.) திருப்புவிசை மாற்றி : பின் சக்கரங்களில் திருப்பு விசையை அதிகரிக் கும் பொருட்டு விசேஷமாக அமைக்கப்பட்ட இயங்கு விசை செலுத்தும் முறை. இதன் மூலம் விரைவில் வேகம் எடுக்கும்

Torque stand : (வானூ.தானி.) திருப்பு விசை மானி : ஒரு என்ஜி