பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

598

னின் திருப்பு விசையை அளப்பதற்கான சோதனை மேடை.

Torgue wrench : (எந்.) திருப்பு குறடு : திருகு குறட்டைப் பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நிலைக்கு மேல் திருப்ப முடியாது.

Torsion : (பொறி) முறுக்கு: ஒரு தண்டைத் திருப்புகையில் உருமாற்றமடைய முற்பட்டு முறுக்கிக் கொள்ளும் போக்கு.

Torsional strength : (பொறி.) முறுக்கு திறன் : முறுக்கு விசையை எதிர்த்து தாங்கி நிற்பதற்கு ஒரு தண்டு போன்றவற்றுக்கு உள்ள திறன். இத்திறன் ஒரு தண்டின் குறுக்களவின் முப்படிக்கு ஏற்ப மாறுபடுகிறது.

Torsion balancer : (தானி.) திருகு சமனாக்கி : பிஸ்டனின் உந்தல்களால் ஏற்படும் அதிர்வுகளைக் குறைக்கும் பொருட்டு கிராங்க்ஷாப்டின் முனையில் பொருத்தப்பட்ட கருவி.

Torsion spring : திருகு ஸ்பிரிங் : மேலிலிருந்து கீழாக வளைந்து வளைந்து புரிபோல அமைந்த ஸ்பிரிங், இதன் இரு முனைகளும் நன்கு பொருத்தப்பட்ட நிலையில் அழுத்தப்படும்போது சுருளுவதும், நீளுவதுமாக இருக்கும்.

Torso : (க.க.) சிலை முண்டப் பகுதி : கட்டுமானக் கலையில் உருமாறிய தூண்களைக் குறிப்பது (2). தலைப்பகுதி இல்லாமல்

உடல் மட்டுமே காணப்படுகிற சிலை.

Torus : (க.க.) பீடப்புடை வளையுறுப்பு : பெரிய வடிவிலான குவிந்த அமைப்பு கொண்ட அரை வட்ட அச்சு, அடித்தளத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுவது.

Tote boxes or pans : (பட்.) உதிரிப் பொருள் கிண்ணம்: தொழிற்சாலைகளில் சிறிய உறுப்புகளை சேமித்து வைக்க அல்லது எடுத்துச் செல்வதற்குப் பொதுவில் பெட்டிகள், அல்லது உலோகத்தால் ஆன கிண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவில் சற்று சரிவான வடிவில் இருக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக வைத்து அடுக்குவதற்கு இது வசதியாக இருக்கும்.

Toughness : (பொறி.) கடினத்துவம் : நிரந்தர உருமாற்றத்தை எதிர்த்து நிற்பதிலும், அவ்வித நிரந்தர உருமாற்றம் ஏற்பட்ட பின்னர் முறிவை எதிர்த்து நிற்பதி லும் ஓர் உலோகத்துக்குள்ள திறன் .

Touring car : (தானி.) உலா கார் : ஐந்து அல்லது ஏழு பயணிகள் ஏறிச் செல்கின்ற வகையில் அமைந்த திறந்த உடல்பகுதி கொண்ட கார்.

T Plate: (க.க.) T வடிவத் தகடு: ஆங்கில 'T' வடிவம் கொண்ட ஒர் உலோகத் தகடு, இரு பரப்புகள் ஒன்று சேரும் இணைப்புப்