பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதியை வலுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுவது.

Trace : பற்றி வரை (வரைதல்) : மூல வரைபடம், தேசப்படம் போன்றவற்றின் மீது மெல்லிய துணி அல்லது காகிதத்தை வைத்து அதன் மீது கோடு வரைந்து பிரதி எடுத்தல்; பென்சில் கொண்டு ஓர்ப் படம் தயாரித்தல்; தேசப்படம் தயாரித்தல்.

Tracer : பற்றி வரையாளர் : வடிவரைவாளர் தயாரித்த வரைபடங்கள் மெல்லிய காகிதங்களை வைத்து பற்றி வரைப்பிரதிகள் பலவற்றை எடுக்கிற உதவியாளர் அல்லது துணை வடிவரையாளர்.

Tracery : (க.க.) ஊடு சித்திரம் : வட்ட வடிவ கண்ணாடி, பலகணிகள், பலகணிகளுக்கு மேல் அமைந்த கண்ணாடிகள் ஆகியவற்றின் மீது ஒளி ஊடுருவுகிற அலங்கார வேலைப்பாடுகளை அமைத்தல்.

Trachelium : (க.க) டிராக்கிலியம் : கிரேக்க டோரிக் பாணித் தூண்.

Tracing : பற்றி வரைதல் : (வரைபடம்) முதல் நிலை வரை படம். வடிவப்படம், வரைபடம் தயாரித்தல், மெல்லிய துணி, காகிதம் அல்லது ஒளி ஊடுருவுகின்ற விரிப்புப் பொருள்களை வரைபடங்கள் மீது வைத்து பிரதிகளை எடுத்தல்.

599

Tracing a circuit : (தானி;மின்.) சர்க்கியூட்டைக் கண்டறி :1.(மோட்டார் - மின்) மூலத்திலிருந்து இயக்க நிலைவரை ஒரு சர்க்கியூட்டை மீட்டரைப் பயன்படுத்தி, மணி அடிக்கிற ஜெனரேட்டரைப் பயன்படுத்தி, கோளாறைக் கண்டு பிடிப்பது அல்லது சர்க்கியூட்டை மேலும் நீட்டிப்பது. 2. மின்சார வயர் மீதுள்ள நூல்களின் நிறத்தை வைத்து அடையாளம் காண்பது.

Tracing linen : பற்றி வரையும் துணி : (வரைதல்) துணிமீது தக்க பூச்சு அளித்துப் பிறகு அத்துணியைப் பற்றி வரைதலுக்கு பிரதி எடுப்பதற்காக பயன்படுத்துதல்.

Tracing paper : பற்றி வரைத்தாள் : (வரைபடம்) ஒரளிவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத்துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதபோது பற்றி வரைத்துணியை விட பற்றி வரைத்தாள் உகந்தது.

Tracing tool ; பற்றி வரைக்கருவி : தோல் மீது டிசைன்களை எழுதவும், அமைத்து முடிக்கவும் பயன்படுகிற கூரான, சிறியதொரு கருவி.

Traction : டிராக்ஷன்: சாலை மீது சக்கரங்கள் உருளும்போது ஏற்படுவது போன்ற உருன்