பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

606

களைப் போட்டு வைப்பதற்கான பல அறைச் சட்டம்.

Triplex steel : (உலோ.) முப்படி உருக்கு : பெஸ்ஸிமர் முறை. திறந்த உலைமுறை மின்சாரமுறை ஆகிய மூன்றையும் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட உருக்கு.

Tripoli : திரிபோலி : பொடிப் பொடியாக உதிர்ந்து போகிற அளவுக்குத் தரம் கெட்டுப் போன சுண்ணாம்புக்கல், பாலிஷ் போடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Tripper: விடுவை: (பட்.) எந்திரத்தில் ஓர் உறுப்பு திடீரென மற்றோர் உறுப்பை விடுவிக்கிற ஏற்பாடு அல்லது அவ்விதம் விடுவிக்கிற, உறுப்பு. இந்த ஏற்பாடு கையால இயங்குவதாக அல்லது விசையால் இயங்குவதாக இருக்கும்.

Tri-sect: மூவெட்டு: மூன்று சமபகுதிகளாகப் பிரித்தல்.

Trolley: (மின் ) தொடு சக்கரம்: ஒரு சாதனத்தை இயக்க அல்லது சாலையில் ஒடும் வாகனம் இயங்கு வதற்கு தலைக்கு மேலே உள்ள மின் கம்பியிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு ஒரு தண்டின் மேல் நுனியில் மின் கம்பி மீது உட்காரும் வகையில் சிறு சக்கரம் இருக்கும் அல்லது வழுக்கிச் செல்லும் தொடு சாதனம் இருக்கும்: (எந்திர) சங்கிலியைப் பயன்படுத்தி பாரத் தைத் தூக்குவதற்கான சக்கர வடிவிலான தாங்கு பகுதி. இது ஒரு நீண்ட உலோகத் தண்டு மீது நகர்ந்து செல்லக்கூடியது.

Trouble lamp: (மின்.) சங்கட விளக்கு: மிக நீண்ட மின் கம்பியின் நுனியில் பல்பு பொருத்தப்பட்ட விளக்கு. பழுது பார்க்கும்போது அவ்விடத்துக்கு ஒளி கிடைக்க உதவுவது.

Trowel (வார்ப்.) கரனை: வார்ப்பட ஆலைக் கரணைகள் சிறியவை; குறுகலானவை. பொதுவில் இவை சுமார் 11/2 அங்குல அகலமும் 5 அல்லது 6 அங்குல நீளமும் உள்ளவை.

Troy weight: டிராய் எடை: இந்த அளவு முறைப்படி ஒரு ராத்தல் என்பது 12 அவுன்ஸ் பொற் கொல்லர்களும், நகைக் கடைக்காரர்களும் பயன்படுத்தும் எடை முறை 24 கிளெரன் = 1 வெள்ளி வெயிட் 20 வெள்ளிவெயிட் = 1 அவுன்ஸ் 12 அவுன்ஸ் = 1 ராத்தல்

True air speed meter: (வானூ. ) விமான அசல் வேகமானி: இது ஒரு வகையான காற்று வேகமானி. இது காற்றின் வேகத்தையும் கணக்கில் கொண்டு விமானத்தின் உண்மையான வேகத்தைக் கண்டறிந்து கூறுவது.

Trunnion: சாய்வு புயங்கள் : நீண்ட குழல் அல்லது தண்டின் நடுப்பகுதியில் இரு புறங்களிலும் நீட்டிக் கொண்டிருக்கிற புயங்கள். இவற்றைத் தாங்குதுாண்கள் மீது அமைத்தால் குழலை அல்லது தண்டை மேலும் கீழுமாகத் தக்க படி சாய்த்து அமைக்க முடியும்.