பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Truss : (க.க.) மூட்டு : கட்டடத்தில் நீண்ட இடைவெளிகளுக்கு நடுவே பாரத்தைத் தாங்குவதற்காக அமைக்கப்படுகிற முன் கூட்டி இணைக்கப்பட்ட முக் கோண வடிவ கட்டுமானப் பகுதிகள் இருக்கைகளில் இரு ஓரங்களைத் தாங்குவதற்குப் பயன்படுத்தப்படும் உறுதியான சட்டங்கள். பொதுவில் இவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.

Trussed axle (தானி.) முட்டுத் தண்டு : முட்டுத் தண்டு மூலம் உறுதியேற்றப்பட்ட அச்சு.

Trussed beam: (க.க.) முட்டுக் கம்பி மூலம் வலுவேற்றப்பட்ட நீண்ட தண்டு.

Truss rod: முட்டு மூலம் வலுவேற்றப்பட்ட தண்டின் இரு முனைகளிலும் பிணைக்கப்பட்ட கம்பி.

Try square. (எந்.) அளவுச்சதுரம்: தாங்கள் கையாளும் பொருள் உண்மையில் சதுரமானதுதானா என்று சோதிக்க மெக்கானிக்குகள் பயன்படுத்தும் ஒரு சிறு சதுரம், செங்கோணத்தைக் குறிக்கவும் இது பயன்படும்.

T slot: (எந்.) T. குழி: கடைதல், இழைத்தல், மற்றும் வேறு பணிக்கான எந்திரத்தின் மேடையில் உள் வெட்டு மூலம் டி. போல்ட்டின் தலை உட்காருகிற அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட குழிவு. இக்குழிவானது டி. போல்ட்டை தக்க

607

நிலைக்கு சரிபொருத்தம் செய்ய உதவும்.

T slot cutter: (எந்.) டி.குழி வெட்டுக் கருவி: டி. குழிகளின் அகன்ற பகுதிக்கு நேர்த்தி அளிப்பதற்காகப் பயன்படுகிற கடைசல் வெட்டுக் கருவி.

T sqaure: (க.க.) T சதுரம்: வடி வரைவாளர் பயன்படுத்தும் கருவி. இரண்டு முதல் மூன்று அங்குல அகலம் கொண்ட ஒன்று முதல் ஐந்து அடி நீளம் கொண்ட பட்டை. இதன் தலைப்புறத்தில் செங்கோணமாக அமையும் வகையில் இப்பட்டை பொருத்தப்பட்டுள்ளது. தலைப்புறப் பட்டை குறைந்தது இரு மடங்கு பருமன் கொண்டது. டி. சதுரமானது இணை கோடுகளையும். கிடைமட்டக் கோடுகளையும் வரையப் பயன்படுவது.

Tube: (மின்.) குழாய்: ரேடியோ கலைகளைக் க ண்டு பிடித்து பெருக்குவதற்கான கருவி, மற்றும் சிறு அளவு மின்சாரங்களைக் கண்டறியவும், இருதிசை மின்சாரத்தை நேர்திசை மின்சாரமாகத் திருத்து வதற்கும் பயன்படுகிற சாதனங்களின் ஒரு பகுதியாகப் பயன்படுகிற கருவிகள் உள்பட பொதுப் படையான சொல்.

Tube punch: (தோல்.) குழல் துளைக்கருவி: கட்டிங் பிளையர் போன்று கையால் இயக்கித் துளையிடும் கருவி. துளையிடுவதற்கென குழிவான சிறு குழல் அல்லது குழல்