பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610

ஆறுகளுக்கு அடியிலும் சுரங்கப் பாதை அமைக்க அளவீடுகள், டிசைன் ஆகியவற்றைத் தயாரித்து கட்டுமானத்தை மேற்பார்வையிடுபவர்.

Turbidity : கலங்கல்: தெளிவான நீருடன் ஒப்பிடுகையில் வண்டல் போன்றவற்றால் நீர் கலங்கி இருக்கும் அளவு.

Turbine : டர்பைன் : ஒரு வகை நீராவி என்ஜின். இதில் இயக்குவிக்கும் உறுப்புகள் அனைத்தும் சுழல்கின்றன.

Turbo - propeller engine : (வானுர.) டர்போ கழலி என்ஜின் : வாயு டர்பைன் மாதிரியிலான விமான என்ஜின். இதில் டர்பைன் விசையானது கம்பிரசரையும் அத்துடன் சுழலியையும் இயக்கப்பயன்படுத்தப்படுகிறது. அநேக சமயங்களில் இது "டர்போ -புரோப்' என்றும் குறிப்பிடப்படுகிறது.

Turbulent flow: (வானூ.) கொந்தளிப்பான ஒட்டம்: நீர்ம ஓட்டத்தில் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் வேகத்தின் அளவும், திசையும் நேரத்துக்கு நேரம் விரைவாக மாறிக்கொண்டே இருக்கின்ற நிலை.

Turf or peat: (காண்க பீட்.) டர்ப் அல்லது பீட்:

Turn - and - bank indicator: (வானூ) திருப்பு சாய்வுமானி


விமானம் எந்த அளவுக்குத் திருப்புகிறது என்பதையும் எந்த அளவுக்குத் சாய்ந்து செல்கிறது என்பதையும் காட்டுவதற்கு ஒரே உறைக்குள் அமைந்துள்ள கருவி.

Turnbuckle: (எர்.) திருப்பு பிணைப்பு: இரு தண்டுகளை ஒன்றோடு ஒன்று திருகி இணைப்பதற்கு புரி கொண்ட இணைப்பு.

Turned sort: (அச்சு.) திரும்பிய எழுத்து: அச்சுக் கோக்கும்போது வேண்டுமென்றே மேல் பகுதி அல்லது முகப்புப்பகுதி கீழ் நோக்கி இருக்கும் வகையில் அமைக்கப்படுவது. இதனால் பிரதி எடுக்கும் போது அடிப்பகுதி மேல் நோக்கி இருப்பதால் கருப்பாக விழும். உரிய எழுத்து இலலாத நிலையில் அந்த இடத்தில் உரிய எழுத்தைப் பின்னர் அமைக்க வேண்டும் என்று குறிப்பதற்காக இவ்விதம் தலை குப்புற வேறு எழுத்து வைக்கப்படுகிறது.

Turning gouge: (மர,வே.) திருப்பு செதுக்குளி: கடைசல் எந்திரத்தில் மரக்கட்டைகளை சாய்வான முனை கொண்ட செதுக்குளியைப் பயன்படுத்தி மரத்தைச் செலுத்தி எடுப்பது. இவ்வித செதுக்குளி முனையின் அகலம். 1/4 முதல் 11/2 அங்குலம் வரை இருக்கும்.

Turning machine: வளைப்பு எந்திரம்: ஒரு உருளையின் விளிம்பை வெளிப்புறமாக உள்ளே கம்பி அமைக்கிற வளையம் வளைத்து