பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618

னம் குறையும்.பெட்ரோல் உபயோகம் குறையும்.

Two-tone steer hide: இரு வழி தோல் பயன்: விலை குறைந்த தோல் பொருள் புத்தகங்களை பைண்ட் செய்கையில் மேற்புறத்தில் அமைக்கவும், உறைப்பெட்டி களின் மேற்புறத்தில் அமைக்கவும் பயன்படுவது. இயற்கை நிலையில் அல்லது பல வண்ணப் புள்ளிகளு டன் கிடைக்கப்பெறுவது.

Two way radio: இரு வழி வானொலி தொடர்புக் கருவி: பல் வேறு இடங்கள் இடையே ரேடியோ தொடர்பு கொள்வதற்கு உதவும் சாதனம். எங்கும் எடுத்துச் செல்லத்தக்கது. ரேடியோ அலைகளைப் பெறுவதற்கும் அனுப்புவதற்குமான கருவிகள் அடங்கியது:

T wrench: “T” வடிவ திருப்பு கருவி: T வடிவில் உள்ள திருப்பு கருவி. பற்றிக் கொள்வதற்குக் குழிவு இருக்கும்.

Tympan : (அச்சு.) அழுத்துப் படலம் : அச்சிடும் போது காகிதம் மீது எழுத்துகள் நன்கு பதிந்து அச்சிடுவதற்கான வ கையில் தகுந்த அழுத்தத்தைக் கொடுப்பதற்காக அச்சு எந்திரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேலாக வைக்கப்படும் காகிதங்கள்.

Tympanum : (க.க.) முகட்டுக் குமிழ் : கட்டடத்தின் மேற்புறத்தில் அலங்காரமாக முக்கோண வடிவில் அமைக்கப்படுகிற இடம்.

Type : (அச்சு.) அச்சு எழுத்து : உலோகத்தால் ஆன எழுத்து. அச்சிடுவதற்குப் பயன்படுவது. இதன் உயரம். 0. 918 அங்குலம்.

Type caster : (அச்சு.) அச்சு வார்ப்பு எந்திரம் : அச்சு எழுத்துக்களை வார்க்கும் எந்திரம்.

Type gauge : (அச்சு.) எழுத்து அளவி : அச்சுக் கோக்கப்பட்ட வாசகத்தில் எவ்வளவு வரிசைகள் உள்ளன என்று அளவிடுவதற்கு குறியீடு செய்யப்பட்ட மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன அளவி'

Type high : (அச்சு.) அச்சு உயரம் : அச்சு எழுத்தின் உயரம் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவில் இதன் உயரம். 0. 918 அங்குலம்.

Type metal : (அச்சு.) அச்சு உலோகம் : ஒரு பங்கு ஈயம், இரு பங்கு ஆன்டிமனி, ஐந்து பங்கு காரீயம் ஆகியவற்றால் ஆன அலோகம்,

Type planer : (அச்சு.) எழுத்து சமன்படுத்தி : நல்ல கெட்டியான மரக்கட்டை சேரில் எழுத்துக்களை கலங்களாக அடுக்கிய பின்னர் எழுத்துகளின் தலைகள் சமச் சீராக ஒரே மட்டத்தில் அமைய இக்கட்டை கொண்டு தட்டி விட்டுப் பிறகு கேஸை முடுக்குவர்.

Typographer :(அச்சு) அச்செழுத்தாளர் :தலைமை அச்சா-