பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

614

ளர் அல்லது அச்சு எழுத்துகளை வடிவமைப்பவர் .

Typographic : (அச்சு.) அச்சுக் கலை: அச்சுக் கலைத் தொடர்பாக.

Typography : (அச்சு.) அச்செழுத்தியல் : 1. அச்சுக்கோத்தல் அல்லது எழுத்துக்களை தக்கவாறு அடுக்குதல். 2. அச்சுக்கலை.

U

U bolt: (எந்.) U-மரையாணி: 'U' என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த மரையாணி. இதன் இரு முனைகளிலும் திருகிழை அமைக்கப்பட்டிருக்கும். இதனை. உந்து ஊர்தியில் உள்ளது போன்ற விற்கருளைப் போல் "பிடிப்பு ஊக்கு’ என்றும் கூறுவர்.

U clamp; (எந், பட்.) U-பற்றுக் கருவி: "U" என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த பற்றுக் கட்டை, சமதளப் படுகைகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய இறுக்கிப் பொருத்துவதற்கு இது பயன்படுகிறது.

U-dometer: (இயற்.) U-மழை மானி: ஒரு வகை மழை மாணி.

Ultimate strength: (பொறி.) இறுதி வலிமை : எந்திரத்தில் மிக அதிக அளவில் நிலைப்படுத்தக் கூடிய பார விசை.

Ultra marine: (வண்.) நீல வண்ணப் பொருள்: வெண் களிமண், கரி, கந்தகம் போன்றவற்றிலிருந்து செய்யப்படும் நீல வண்ணப் பொருள்.

Ultra micro meter: (வண்.) உறுதுண்ணளவை மாணி: அங்குலத்தின் பத்து லட்சத்தில் ஒரு கூறினையும் துள்ளியமாகக் கணிக்கும் அளவை மானி.

Ultra microscope: (வண்.) புடையொளி நுண்ணோக்காடி.

Ultra speed welding: கடும் வேகப் பற்றவைப்பு: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பற்ற வைப்பு மின் முனைகளைக் கொண்டு, பற்ற வைக்க வேண்டிய பொருளை ஒரே சமயத்தில் தொட்டுச் செய்யப்படும் மிக வேகப் பற்றவைப்பு முறை.

Ultra-violet: புற ஊதாப்பகுதி: கண்ணுக்குப் புலனாகாத நிறப்பட்டையின் ஏழு நிறங்களில் ஊதாக் கதிர்களுக்கு அப்பாற்பட்ட மண்டலம்.

Umber: (வண்.) செங்காவி: மங்கனீஸ் ஆக்சைடும், களிமண்ணும் அடங்கிய பழுப்புச் செங்காவி வண்ணம். இது நிறமியாகப் பயன்படுத் தப்படுகிறது.