பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Uncontrolled spin: (வானூ.) கட்டற்ற சுழற்சி: விமானத்தில் கட்டுக்கடங்காமல் சென்று விடும் சுழற்சி.

Under-ground cable: (மின்.) தரையடிக் கம்பி வடம் : ஈயம் அல்லது பிற நீர்புகாப் பொருள்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும்.

Underlay : (வண்.) அடித் தாங்கல் : அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக் கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல்.

Under pinning : (பொறி.) அடையுதைவுக் கட்டுமானம் : சுவர்க் கட்டுமானங்களில் கீழ்க்கட்டுமான ஆதரவு அமைத்துத் தாங்குதல் அமைத்தல்.

Under shot wheel : (பொறி.) நீர்விசைச் சக்கரம் : அடியில் நீரோடல் மூலமாக இயக்கப் பெறுகிற சக்கரம்.

Under writer : (மின்.) மின் சாதன ஆய்வாளர் : மின் சாதனங்கள் நீண்ட நாட்கள் உழைக்கக் கூடியனவா, எளிதில் தீப்பிடிக்காமல் காப்புடையனவா என்பதைச் சோதனை செய்து ஆராய்ந்தறிய வல்ல நிறுவன ஆய்வாளர்.

Undulatory movement :

615

(வானூ.) அலையூசல் இயக்கம் : அலைகளைப் போல் ஏற்ற இறக்கத்துடன் இயங்குதல்.

Uniform load : (பொறி.) மாறாநிலைச் சுமை : வேறுபாடின்றி மாறாத நிலையிலுள்ள சுமையளவு. இதில் எஞ்சினின் கட்டமைப்புச் சுமையும், அதில் ஒரு சீராகப் பரப்பி வைக்கப்பட்டுள்ள பாரத்தின் சுமையும் உள்ளடங்கும்.

Unilatral tolerance : ஒரு பக்கத் திறம் : அடிப்படைப் பரிமாணத்திலிருந்து ஒரு பக்கம் கூடுத லாகவோ குறைவாகவோ வேறுபடுவதற்கு இடங்கொடுக்கும் அமைவு. எடுத்துக்காட்டு: 5.250" - 002'

Union : (கம்.) கூட்டிணைப்பு : குழாய்களை இணைத்தல் அல்லது பொருத்துதல்.

Unit magnetic pole : (மின்.) ஒரும காந்தத் துருவம் : ஒரு செ.மீ. துாரத்திலுள்ள சம அளவு ஆற்றல் வாய்ந்த ஒரே துருவத்தை ஒரு டைன் (நொடி விசையழுத்தம்) ஆற்றலுடன் விலக்குகிற காந்தத் துருவம். ஒரு கிராம் எடைமானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு செ.மீ. விழுக்காடு செலுத்த வல்ல அளவுடைய விசை ஆற்றல் அலகு ஆகும்.

Unit of Illumination : (மின்.) ஒளியடர்த்தி அலகு : மெழுகு விளக்கொளி ஒரு விளக்கின் ஒளிர் திறன். சராசரி கோள மெழுகு விளக்கொளி என்பது, விளக்கின்