பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

692

Velocity : (எந்.) திசை வேகம் : கடக்கும் தொ லைவை நேரத்தால் வகுத்து ஒரு விநாடிக்கு அல்லது ஒரு நிமிஷத்துக்கு இவ்வளவு அடி என்று கூறுதல் (இயற்.) ஒரு பொருள் செல்லும் விகிதம்.

Velox paper ; வெலாக்ஸ் காகிதம் : குறிப்பிட்ட வகைப் புகைப்படத் தாளின் வணிகப் பெயர்.

Veneer: (க க; மர. வே.) நேர்த்தி முகப்பு : (தொல் - மர நேர்த்தி) சாதாரண மேற்பரப்புக்கு நேர்த்தி யான உயர்ந்த பார்வை அளிக்க அல்லது செலவைக் குறைக்க மரம் அல்லது வேறு பொருள் மீது மெல்லிய படலத்தைப் படிய வைத்தல்.

Veneer press : (மர. வே.) மேலொட்டு அழுத்தப் பொறி : ஒட்டுப் பலகை அல்லது நீள் சதுரப் பலகைத் துண்டுகளைப் பசையிட்டு ஒட்டுவதற்கான பெரிய, கனமான அழுத்தப் பொறி.

Veneer saw : (மர.வே.) மேலொட்டு ரம்பர் : மெல்லொட்டுப் பலகைகளை வெட்டுவதற்குப் பயன்படும் தனி வகை வட்ட வடிவ ரம்பம்.

Venetian blind : (க.க.) பலகணித் திரை : மடக்கு வரிச்சட்டம் பல கணித் திரை.

Venetian red : (வண்.) இரும்பு ஆக்சைடு (Fe202) : சிவப்பு வண்ணப் பொடியாகப் பயன்படும்

இரும்பு ஆக்சைடுக் கலவை. இது இரும்பு சல்பேட்டை சுண்ணாம்புடன் சூடாக்குவதன் மூலம் கிடைக்கிறது.

Vent : (வார்.) வாயுத் துளை : வார்ப்பட வேலையில் வாயுக்கள் வெளியேற இடமளிப்பதற்காக அமைக்கப்படும் ஒரு சிறிய துளை.

Ventilatlon : (க.க.) காற்றோட்டம் : அறையில் காற்றோட்டம் ஏற்படுமாறு செய்யும் முறை.

Ventilator : (க.க.) பலகணி : வெளிச்சமும், காற்றும் வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாதனம்.

அசுத்தக் காற்றை வெளியேற்றுவதற்கான புழை.

Vent pipe : (க.க.) காற்றுக் குழாய் : பல்வேறு குழாய் அமைப்புகளிலிருந்து புகைக்கூம்பு வழியே காற்று வெளிச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறிய குழாய்.

Vent stack: (க.க.) புகைக் கூம்பு ; காற்றுக் குழாய்களுடன் இணைக்கப்பட்டுக் கூரைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் செங்குத்தான குழாய். இதன் வழியாக வாயுக்களும் புகையும் வெளி யேறுகினறன.

Vent wire : (வார்.) வாயுக் கம்பி : வார்ப்பட வேலையில் நீராவியும், வாயுவும் வெளியேறுவதற்காக, வார்ப்பிலிருந்து தோரணி