பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யை அகற்றுவதற்கு முன்பு ஒரு கம்பி மூலமாகத் துளைகள் உண்

டாக்கப்படுகின்றன.

Veranda (க.க.) தாழ்வாரம் : கட்டிடத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்குமாறு அமைக்கப்படும் திறந்த நிலை ஒட்டுத் திண்ணை.

Verdigris : (வேதி) தாமிரத் துரு: இது தாமிரத்தின் மேற்பரப்பில் ஆக்சிகரணம் ஏற்படுவதால் உண்டாகிறது. தாமிரத்தை அசெட்டிக் அமிலத்துடன் கலப்பதாலும் தாமிரத்துரு உருவாகிறது. இது முக்கியமாக நிறமியாகவும், சாயப் பொருளாகவும் பயன்படுகிறது.

Verge : (க.க.) மோட்டு விளிம்பு : மூக்குட்டுச் சுவர் கடந்த மோட்டு விளிம்பு. இது கூரையின் மஞ்சடைப்புக்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும்.

Vermiculation : (க.க.) புழு அரிப்புத் தடம் : புழு அரிப்புப் போன்ற வரிப்பள்ளங்களுடைய தடம்.

Vermilion :(வண்.) இரசக் கந்தகை : செந்நிறமான இரசக் கந்தகை. இது நிறமியாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. பாதரசச் சல்பைடிலிருந்து (HgS) பெறப்படுகிறது.

Vernier : (எந்.) வெர்னியர் : ஒரு நிலையான அளவு கோலின் உட்பிரிவுகளின் பின்னப் பகுதி


628

களைக் கணக்கிட்டு அறிவதற்குப் பயன்படும் ஒரு சிறிய நகரக்கூடிய துணை அளவுகோல்.

Vernier depth gauge : (எந்.) வெர்னியர் ஆழ அளவி : வெர்னியருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகைச் சலாகை வடிவ அளவு கருவி. இது குறுகலான ஆழப் பகுதிகளின் ஆழத்தை அளந்தறியப் பயன்படுகிறது.

vertical : (கம்.) செங்குத்து நிலை : செங்கோட்டு நிலை; வான விளிம்புக்குச் செங்கோணத் திலுள்ள நிலை.

Vertical boring mill : (எந்). செங்குத்துக் துளைகருவி : கடைசல் எந்திரத்தில் ஒரு சுழல் மேசையில், இழைப்புளியை செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் நகர்த்தி கடைசல் வேலை செய்வதற்கான கருவி,

Vertical centering : நிலை குத்து மையம் : தொலைக் காட்சிப் பெட்டியின் திரையில் படத்தை செங்குத்தாக நிலைப்படுத்துவதற்கு உதவும் கட்டுப்பாட்டு அமைவு.

Vertical lathe : (எந்.) செங்குத்துக் கடைசல் எந்திரம் : பக்க வாட்டில் தலைப்பக்கம் உடைய ஒரு செங்குத்துத் துளைக் கருவி.

Vertical tall area ; (வானுர்.) செங்குத்து வால் பகுதி : விமானத்தில், சுக்கானின் உள்ளபடியான புறக்கோட்டுக்கும், செங்குத்துத்