பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

627

W

Wainscot: (க.க.) சுவர்ப் பலகை: உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளைப் பதித்து அழகுபடுத்துதல்.

Wainscoting: (க.க.) சுவர்ப் பலகையிடு: உட்புறச் சுவர்களில் நேர்த்தி செய்யப்பட்ட பலகைகளை அமை.

Wainscoting cap: (க.க.) சுவர்ப் பலகைத் தொப்பி: சுவர்ப் பலகைகளின் உச்சியில் வார்ப்புகளை அமைத்தல்.

Wall bed: (க.க.) சுவர்ப்படுக்கை: சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப் படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும்.பல வகைகளிலான இவ்விதப் படுக்கைகள் சிறிய இல்லங்களில் பொதுவில் பயன்படுத்தப்படுகின்றன.

Wallboard : (க.க.) சுவர் போர்டு : கட்டடத்துக்குள்ளாக உள்புறச் சுவர்களிலும் கிடைமட்டக் கூரைகளிலும் பிளாஸ்டர் பூச்சுக்குப் பதில் ஒட்டி நிற்கும் வகையில் பயன்படுத்தப்படுவது.

Wall bracket : (எந்.) சுவர் பிராக்கெட் : செங்கோண வடிவிலான தண்டு இரு புயங்களில் ஒன்றைச் சுவர் மீது அல்லது கம்பம் மீது பொருத்தலாம். எதையேனும் தாங்கி நிற்க மற்றொரு புயம் உதவும்.

wall plate : (க.க.) சுவர் பிளேட்: வேலை பளு பரவலாக அமையும் பொருட்டு உத்தரம், இரும்பு கர்டர் ஆகியவற்றை இரு ஓரங்களிலும் தாங்கி நிற்க சுவரில் பிதுக்கமாக அமைந்துள்ள மரத் தண்டு.

Wall socket : (க.க.) சுவர் துளையம் : மின்சாரம் பெறுவதற்கென சுவருக்குள் அல்லது சுவர் மேல் அமைந்த மின்னோட்ட முனை.

Wane : (மர. வே.) கோட்டம் : உத்திரம் அல்லது பலகை ஒரு நுனியிலிருந்து மறு நுனி வரை ஒரே சமமாக இல்லாமல் ஏதாவதுஒரு புறம் சற்று கோணலாக இருத்தல்.

Warding file : (எந்.) பட்டை அரம் : மெல்லிய, தட்டையான அரம். குறிப்பாக பூட்டுத் தயாரிப்பாளர்கள் பயல்படுத்துவது.

Warp : (வானூ.) பாவு நூல்: விமான இறக்கையின் வடிவம் மாறும் வகையில் அதை வளைத்-