பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யைச் செலுத்தும்போது உண்டாவது. இந்த வாயு திரவ ஹைட்ரோ கார்பன்களைக் கொண்டது. சில சமயங்களில் எரிபொருளாக அல்லது வெளிச்சம் தருவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

Water glass: (வேதி.) நீர்க் கண்ணாடி: குவார்ட்ஸ் மணலை. பொட்டாஷ் அல்லது சோடியம் ஹைட்ரேட்டுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிற சோடியம் அல்லது பொட்டாசியம் சிலிக்கேட் கரைசல். இது எண்ணெய் கலந்தது போலக் குழம்பாக இருக்கும். ஒட்டு வதற்கும், காப்புப் பூச்சாகவும், தீக்காப்புப் பொருளாகவும் பயன்படுவது.

Water hammer: நீர் அறைவு: ஒரு குழாயின் வழியே செல்லும் நீரைத் திடீரென்று தடுத்து நிறுத்தினால் சம்மட்டி அறைவது போன்று எழும் ஒலி.

Water jacket: (பொறி.) நீர்ப் போர்வை: மோட்டார் பிளாக் மற்றும் ஹெட்டின் வெளிப்புற மூடு உறையானது அதற்கும் சிலிண்டர் சுவர்களுக்கும் இடையே நீர் பாய்ந்து செல்லும் வகையில் வடிவமைக் கப்பட்டிருக்கும். மோட்டார் இயங்கும்போது தோன்றும் வெப்பத்தைத் தொடர்ந்து அகற்றுவது இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

Water mark: நீரோட்டம்: காகிதம் தயாரிக்கப்படுகையில் புடைப்பான டிசைன் கொண்ட ஒரு சிலிண்டர் ஏற்படுத்தும் அழுத்தம்

828

காரணமாக காகிதத்தில் ஏற்படும் குறியீடு. பின்னர் காகிதத்தில் வெளிச்சம் ஊடுருவும் வகையில் வைத்துப் பார்த்தால் அந்த டிசைன் தெரியும். அது நீரோட்டம் எனப்படும்.

Water proofing walls: (க.க.) நீர் புகாப்பூச்சு: சுவருக்குள் நீர் அல்லது ஈரம் பாயாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டுடன் ஒரு கலவையைக் கலத்தல். அல்லது அந்தக் கலவையைச் சுவர் மீதே பூசுதல்.

Water pump: (தானி.) நீர் பம்ப்: மோட்டார் என்ஜினைக் குளிர்விப்பதற்கான முறையில் நீரோட்டம் நடைபெறுவதற்குப் பயன்படும் பம்ப். இந்த பம்புகள் பொதுவில் சிலிண்டர் பிளக் முன்பாக அமைந்திருக்கும். விசிறி இயக்கத்துடன் அல்லது ஜெனரேட்டர் மூலம் பம்ப் இயக்கப்படுகிறது.

Water putty: (மர.வே.) அடைப்புப் பொடி: இப்பொடியை நீருடன் கலந்து மரப்பொருள்களில் உள்ள மெல்லிய வெடிப்புகள், ஆணித் துவாரங்கள். முதலியவற்றை அளப்பதற்குப் பயன்படுத்தலாம். எனினும், பளபளப்பூட்டுவதற்கு உகந்ததல்ல.

Water recovery apparatus: (வானூ.) நீர் சேகரிப்புச் சாதனம்: வான் கப்பலில் உள் எரி என்ஜின் களிலிருந்து வெளிப்படுகிற வாயுக்களைச் சேகரித்து குளிர்வித்து அவற்றில் அடங்கிய நீரைப் பிரித்தெடுக்கிற சாதனம்,