பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682

Webbing : சாக்குப் பட்டை : சணல் இழையைக் கொண்டு 3, 3 1/2 மற்றும் 4 அங்குல அகலத்தில் 72 கெஜ நீளத்துக்குத் தயாரிக்கப்படுகிற சாக்குப் பட்டை. மர இருக்கை பிரேம்களில் ஸ்பிரிங்குகளுக்குக் கீழே அமைக்கப்படுவது.

Webbing stretcher : விறைப்புக்கட்டை : மர இருக்கைச் சாதனங்களில் திறப்புகளின் மீதாக போர்த்து துணியை விறைப்பாக இழுத்துக் கட்ட உதவும் சிறிய கட்டை. தட்டையான இக்கட்டையின் ஒரு புறத்தில் இறுகப் பிடித்துக் கொள்ள வாட்டமாக ஏதாவது பொருள் சுற்றப்பட்டிருக்கும். மறு புறத்தில் செருகுவதற்கு வசதியாக கூரான உருக்கு முனைகள் இருக்கும்.

Web – calendered : சுருள் நேர்த்தி : காகித உற்பத்தியின் போது காகிதம் நீண்ட சுருளாக இருக்கும் போதே சுழல் உருளைகள் இடையே செலுத்தப்பட்டு மழ மழப்பாக்கப்படுதல்.

Web of drill : (எந். ) குடைவி முனை : ஒரு குடைவு கருவியில் சுழன்று இறங்கும் வெட்டுக் குழிவு களின் அடிப்புறத்தில் குடைவியின் பருமன் .

Wedge : (எந்.) ஆப்பு : ஆங்கில "V வடிவில் மரம் அல்லது உலோகத்தால் ஆன துண்டு. ஒரு பொருஎளில் வலுவான அழுத்தத்தை ஏற்படுத்த அல்லது இரண்டாகப் பிளக்கப் பயன்படுவது.

Wedging : பதமாக்கல் : களி மண்ணைப் பொருளாக உருவாக்கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது.

Weft or woof : ஊடு : தறியில் குறுக்காக அமையும் நூல்கள்.

Weight : காகித எடை : ஒரு ரீம் காகிதத்தின் அல்லது 1000 ஷீட் காகிதத்தின் எடையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் .

Weight font: (அச்சு.) பான்ட் எடை : இன்ன எழுத்து இன்ன விலை என்பதற்கு மாறாக எடைக் கணக்கில் விற்கப்படும் அச்சு எழுத்துகள்.

Weighting : துணி எடைமானம் : பட்டுடன் கனிம உப்புகள் அல்லது வேறு பொருட்களைச் சேர்த்து பட்டுக்கு கனம் சேர்த்தல்.

Weir (பொறி.) தூம்பு : ஆறு , அல்லது ஒடையின் குறுக்கே எழுப்பப்படும் சுவர் அல்லது அணை மின் உற்பத்திக் காரியங்களுக்கு, போதுமான நீர் கிடைக்கச் செய்வதற்காக நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் கட்டப்படுவது.

Welding : (எந்.) பற்று வைப்பு : இரும்பு: அல்ல து உருக்குத் தகடு போன்றவற்றின் ஓரங்களை இணைக்கும் முறை, ஆக்சி ஆசிடிலின் மின்சாரம் அல்லது அடிப்பதன் மூலம் சேர்ப்பது.