பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Welding rod : (பற்ற) பற்ற வைப்புத் தண்டு : பொதுவில் 24 அங்குல நீளமும், 4, 8/8, அல்லது 1/2 அங்குலக் குறுக்களவும் கொண்டது. தீப்பீச்சு மூலம் பற்ற வைக்கையில் இணைக்க வேண்டிய இடத்தில் இத்தண்டுகள் உருகி இணைக்கும்.பற்ற வைப்புத் தண்டு கள் செய்ய வேண்டிய வேலையின் தரத்தைப் பொருத்து வெவ்வேறு வகைப் பொருட்களால் ஆனது.

Welding transformer : (மின்.) பற்றுவைப்பு மின்மாற்றி : ஒன்றோடு ஒன்று பொருத்தப்படுகிற உலோகப் பகுதிகளை இணைப்பதற்கு வெப்பம் பெறப் போதுமான மின்சாரத்தை உடனே தரும் இறக்கு மின்மாற்றி.

Weld - mark : (குழை,)இணைப்பு அடையாளம் : பிளாஸ்டிக் பொருளின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தாரைகள் முற்றிலுமாக ஒ ன் று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம்.

Weld period : பற்று வைப்புக் காலம் : பற்ற வைப்பதை ஒரு தடவை முற்றிலுமாகச் செய்து முடிப்பதற்கு ஆகும் காலம்.

Weld time: பற்றுவைப்பு நேரம் : ஒரு தடவை பற்று வைக்கும் போது மின்சாரம் பாய்வதற்கு அனுமதிக் கப்படுகிற நேரம். துடிப்பு - பற்று வைப்பில் பற்று வைப்பு நேரத்தில் சூடாறும் நேரமும் அடங்கும்.

56

638

Well hole: (க.க.) மாடிப் படிக் குழி: படிக்கட்டுத் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி.

Welted edge: தடித்த விளிம்பு: இருக்கைச் சாதன ங்களில் போர்த்து துணிகளின் விளிம்புகளைச் சேர்த்துத் தைக்கையில் உட்புறமாக துணி போர்த்திய ஒரு கயிற்றைக் கொடுத்துத் தைத்தல். இதன்மூலம் இணைப்புகள் புடைப்பாக இருக்கும்.

Wet end: ஈர முனை: காகிதத் தயாரிப்பு எந்திரத்தில் காகிதம் உருப்பெற்று முதலாவது ஈரம் போக்கும் உருளை வரையிலான பகுதி.

Wet rot: ஈர உருத்து: ஈரப்பசை, உகந்த வெப்பம் காரணமாக மரக் கட்டை உளுத்துப் போதல்.

Wet steam: ஈர நீராவி: ஈரப்பசை அடங்கிய தெவிட்டிய நீராவி.

Wheel and axle: சக்கரமும் அச்சும்: பளுவைத் தூக்குவதற்கு மிக எளிய எந்திர விதி. அச்சில் அமைந்த சக்கரத்தின் வெளிச் சுற்று மீது விசை செலுத்தப்படு கிறது. சங்கிலி அல்லது கயிறு மூலம் எடையானது அச்சுடன் இணைக்கப்படுகிறது.

Wheel base: சக்கர அடிமானம் : கார் அல்லது வாகினில் உள்ளது