பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

White iron: (உலோ.) வெள்ளை இரும்பு: மிகவும் உறுதியான வார்ப்பு இரும்பு, தயாரிப்பின் போது வார்ப்பானது உலோக அச்சில் குளிர்விக்கப்படுகிறது.

White lead: (வேதி;வண்.) ஒயிட்லெட்: காரீயத்தின் ஹைட்ரேடட் கார்பனேட், பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

White - metal Iloyas ; (உலோ.) வெள்ளை உலோகக் கலோகங்கள் : துத்தம், ஈயம், தாமிரம் ஆகிய வற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிற அலோகம், மோட்டார் வாகனத்தில் கடினமான உறுப்புகளை அச்சு வார்ப்பு மூலம் தயாரிக்கப் பயன்படுவது.

White oak : (மர.வே.) ஒயிட் ஒக் : அமெரிக்க ஓக் மரங்களில் மிகவும் உறுதியானது, எடை மிக்கது. அடர்ந்து அமைந்தது. நீடித்த உழைப்பும், வலிமையும் தேவைப்படுகிற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

White pine : (மர. வே.) வெள்ளை பைன் : நீளவாட்டில் உள்ளோட்டம் அமைந்த மென் மரம் : வெளிறிய நிறம்: வடிவமைப்புப் பணிகளுக்கும், இணைப்புப் பணிக்கும் விரிவாகப் பயன்படுவது.

அச்சிடப்

White space :(அச்சு.) வெள்ளிடம் : ஒரு ஷீட்டில் அச்சிடப்படாத பகுதி.

|

68వ

White spots : (வண்; அர.) வெள்ளைத் தட்டு : இறுதிப் பூச்சு அடித்த பின்னர் காணப்படும் சிறு சிறு வெள்ளை நிறப்புள்ளிகள் அல்லது திட்டுகள் அவசரமாகச் செய்த வேலை காரணமாக உள்ளே ஈரப் பசை சிக்குவதால் ஏற்படுவது. சரியாகத் தயாரிக்கப் படாத மட்டமான கரைப்பானைப் பயன்படுத்துவதாலும் ஏற்படுவது.

White spruce : (மா. வே.) விலை குறைவான சாதாரண மரம் : பெரிதும் பிரேம்களைச் செய்யவும், தரைகளை அமைக்கவும், மற்றும் அது போன்ற பணிகளுக்கும் பயன்படுவது.

White wash : (க.க.) வெள்ளையடி : நீரில் கரைத்த சுண்ணாம்பை பிரஷ் கொண்டு பூசுதல் அல்லது ஸ்பிரே கருவி மூலம் ஸ்பிரே செய்தல். சுண்ணாம்பு நன்கு ஒட்டிக் கொள்ள சில சமயங்களில் உப்பு சேர்ப்பது உண்டு. நீலத்தைச் சேர்த்தால் நல்ல வெண்மை கிடைக்கும்.

whiting : (வேதி.) வெள்ளைப் பசை : நன்கு பொடி செய்த சாக்கட்டி எண்ணெயுடன் நன்கு கலந் தால் பசை போலாகும். துளைகளை சந்துகளை அடைப்பதற்குப் பயன்படுவது.

Whitney keys (எந்.) விட்னி கீஸ் : சதுர தண்டு சாவிகள். இரு முனைகளிலும் துணிகள் மழுங்கலாக இருக்கும்.