பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

688

Wind tunnel : (வானூ.) காற்றுச் சுரங்கம் : செயற்கையாக வேண்டிய அளவில் காற்று வீசும்படி செய்வதற்கான சாதனம் அடங்கிய கூடம் : விமான மாடல் போன்றவை வைக்கப்பட்டு காற்று வீசுவதால், காற்று இயக்க விசைகள் சோதனைப் பொருள் மீது ஏற்படுத்தும் விளைவுகளை ஆராய காற்றுச் சுரங்கம் உதவுகிறது.

Wing : (வானூ) இறக்கை : விமானத்தின் முக்கிய தாங்கு பரப்புகள். இடது இறக்கை, வலது இறக்கை, மேல் இறக்கை, கீழ் இறக்கை ஆகியன அடங்கும். (கட்டிட) முதன்மை கட்டடத்திலிருந்து பிரிந்து நீண்டு அமைந்த 'கட்டடப் பகுதி.

Wing axis: (வானூ.) இறக்கை அச்சு: இறக்கையின் எல்லாப் பகுதிகளின் வான் இயக்க மையங்களின் குவியம்.

Winged dividers: இறக்கையுள்ள பகிர்வி: நீளமான கோடுகளைப் பகிர்ந்து, பிரித்துப் பிரித்து அளப்ப தற்கான இறக்கையுள்ள கருவி. கூரான இரு கால்களில் ஒன்றின் மேற்புறத்தில் இணைக்கப்பட்ட மெல்லிய தகடு மற்றதன் ஊடாகவும் சென்று அமைந்திருக்கும். துளையுள்ள காலில் பொருத்தப்பட்ட நிலைப்பு ஸ்குருவை முடுக்கினால் இக்கருவி அளவு மாறாமல் அப்படியே இருக்கும். குறுகாது; விரியாது.

Wing heavy: (வானூ.) இறக்கை

இறக்கம்: விமானம் குறிப்பிட்டதொரு போக்கில் சாதாரணமாகப் பறக்கும்போது கிடை நிலைக் கட்டுப்பாடுகள் இயக்கப்படாத நிலையில் விமானத்தின் வலது அல்லது இடது இறக்கை கீழ் நோக்கிச் சாய்ந்த நிலை.

Wing loading: (வானூ.) இறக்கை எடைமானம்: முற்றிலுமாக பளு ஏற்றப்பட்ட நிலையில் மொத்த எடையை, தாங்கு பரப்பினால் வகுத்து வரும் எண்.

Wing nut: (எந் ) இறக்கை நட்டு: நட்டுகளில் ஒரு வகை. இந்த வகை நட்டில் அதன் இரு புறங்களிலும் இறக்கை போல இரு மெல்லிய பகுதிகள் நீட்டிக் கொண்டிருக்கும். இறக்கைகளைப் பற்றி நட்டு முடுக் கப்படும் அல்லது வெளியே எடுக்கப்படும்.

Wing profile; (வானூ.) இறக்கை விளிம்புரு: ஒரு விமானத்தின் இறக்கையின் ஓரங்களை மட்டும் காட்டும் படம்.

Wing rib: (வானூ.) இறக்கை முதுகு: விமான இறக்கையின் உள் கட்டுமானத்தில் விமான வயிற்றுப் புறப் பகுதியிலிருந்து இறக்கையின் ஊடே அதன் வெளி விளிம்பு வரை அமைந்த தண்டு. அதுவே இறக்கைக்கு வடிவத்தை அளிக்கும் அடிப்படைத் தண்டு.

Wing section: (வானூ.) இறக்கைக் குறுக்கு வெட்டு: விமான இறக்கையின் நீளவாட்டு அல்லது