பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Wood finishing; (மர.வே.) மர நேர்த்தி: மரப்பொருட்களுக்கு இறுதி நேர்த்தி அளிக்க அவற்றைத் தயார்படுத்துவது, பின்னர் பெயின்ட் அல்லது வார்னிஷ் கொடுப்பது; குறிப்பிட்ட நேர்த்தி தேவைப்பட்டால் பாலிஷ் அளிப்பது.

Wood flour : மர மாவு: மிக நைசாகப் பொடி செய்யப்பட்ட மரம். பொதுவில் ஒயிட் பைன் மரத்திலிருந்து தயாரிக்கப்படுவது. லினோலியம் தரை, ரப்பர் ஆகியவற்றில் உள்ள சிறு ஒட்டைகளை அடைப்பதற்குப் பயன்படுவது.

Wood pattern making: மரத்தால் ஆன வடிவங்கள்: மரத்தைக் கொண்டு மாடல்கள் அல்லது பிளான்களைத் தயாரிப்பது.

Wood pulleys (எந்.) மரஉருளை: இது வார்ப்பு இரும்பினால் ஆன உருளை (ஜகடை) யை விட லேசானது. எனினும் அதே அளவிலான பெல்ட் இறுக்கத்தில் 25 சதம் கூடுதலாக விசையைச் செலுத்தியது. மிகுந்த ஈரம் பாய்ந்த வேலைகளுக்கு உகந்தது அல்ல.

Wood screws: (பட்.) மரவேலை திருகாணிகள்: மரவேலைகளுக்குப் பயன்படும் திருகாணிகள் நீள்வட்ட வட்ட, மழுங்கலான தலை என பலவகையான தலைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. ஆணியின் அளவுதலை அதிகபட்சமாகப்பிடிக்

57

641

கின்ற நிலையிலிருந்து முனை வரை கணக்கிடப்படுகிறது. ஜிம் லெட் கூர்முனை அளவுகள் தரப் படுத்தப்பட்டவை. திருகாணிகள் பிரகாசமாக அளவில் கால்வனைஸ் செய்யப்பட்டவை. நீல நிறம் அளிக்கப்பட்டவை. பல வகையான திருகாணிகள் ஒரு சைஸ் ஆணிக்கும் அடுத்த சைஸ் ஆணிக்கும் உள்ள வித்தியாசம் 0.013 அங்குலம், ஆணிகளின் நம்பர்கள் 1 முதல் 30 வரை உள்ளன.1/4 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை பல நீளங்களில் உள்ளன. ஆணியில் புரிகள் மட்டும் அமைந்த பகுதி மொத்த நீளத்தில் 10இல் 7 பங்கு அளவுக்கு உள்ளது. புரிகள் கோணம் 82 டிகிரி.

Wood turning: மரக் கடைசல்: மரக் கட்டைகளை கடைசல் எந்திரத்தில் கொடுத்துக் கடைவது,

wood work: மர வேலைப்பொருள்: மரத்தால் ஆன பொருட்கள்.

Woof: குறுக்கு இழை: நெசவில் அகலவாட்டில் அதாவது குறுக்காக அமைந்த இழை. நீளவாட்டிலான பாவு நூலுக்கு நேர்மாறானது.

Work: வேலை: வேலை என்பது நேரக் கணக்கில் அன்றி அடி|ராத்தல், அங்குலம் ராத்தல், கணக்கில் கூறப்படுகிறது. (இயற்) விசையை தொலைவினால் பெருக்கி வரும் தொகையானது வேலைக்குச் சமம்.