பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Loo

405

Lou


அதிக் நீளமுடைய 6" நீளமுள்ள ஒரு கூர்ங்கருவி.

Long-shunt compound connection: (மின்.) நீள் இணைக்கூட்டுப் பிணைப்பு: மின்னகமும் தொடர் வரிசைக் களச் சுருணையும் இணைந்த சுருணையுடன் குறுக்காக இணைக்களச் சுருணையுடன் இணைக்கும்போது உண்டாகும் பிணைப்பு. இது குறுகிய இணைப் பிணைப்புக்கு மாறுபட்டது.

Long - stroke: (தானி.) நீள் உகைப்பு: துளையின் விட்டத்தை விடக் கணிசமான அளவு அதிக நீளம் உகைத்திடக் கூடியதான ஓர் எஞ்சின்.

Loom: (மின்.) நெகிழ் காப்புறை: மின் கடத்திகளைக் காப்பதற்குப் பயன்படுத்தப்படும் நெகிழ்திறனுடைய உலோகமல்லாத குழாய்.

Loop: (வானூ.) கரண் வளைவு: விமானம் செங்குத்தான மட்டத் தில் ஏறத்தாழ ஒரு வட்ட வளையமாகச் செல்லும் ஒரு கரண உத்தி.

Loop wiring: (மின்.) கண்ணிக் கம்பியிடல்: மின் சுற்று வழியில் மின் கடத்திகளைக் கண்ணிகள் போல் பிணைத்து அமைத்தல் .

Loose dowel:தளர் இணைப்பாணி: இறுக்கமாகப் பொறுத்தப் படாத இணைப்பாணி, இது வேண் டும்போது அகற்றுவதற்கு வசதியாக நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Loose pulley: (பட்.) தளர் கப்பி :எந்திரம் ஒடாதிருக்கும்போது அதை இயக்கும் வார்ப்பட்டை தளர்வாக ஒடுவதற்கான கப்பி.எந்திரம் இயங்கும்போது வார்ப்பட்டை தளர் கப்பியிலிருந்து விரைவாக இயங்கும் கப்பிக்கு மாற்றப்படும்.

Loper: சுழல் சக்கரம்: கயிறு திரிப்பதற்குப் பயன்படும் ஒரு சுழல் சக்கரம்.

Loss factor: (மின். குழை.) இழப்புக் காரணி: விசைக்காரணியையும் மின் காப்பு நிலை எண்ணையும் பெருக்குவதால் கிடைக்கும் தொகை .

Lost motion: (எந்.) இயக்க இழப்பு: இயக்க வேகத்திற்கும், இயக்கப்படும் உறுப்புகளின் வேகத்திற்குமிடையிலான வேறுபாடு. இது குறைபாடான இணைப்புகள், தளர்வுகள் காரணமாக ஏற்படலாம்.

Loud speaker: (மின்.) ஒலி பெருக்கி: அதிகத் தொலைவுக்கு ஒலி எட்டும் வகையில் ஒலியைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம்.

Louis xv, : லூயி xv பாணி: ஃரெஞ்சு அரசன் பதினைந்தாம் லூயி (1728-1774) காலத்திற்குரிய பாணியிலமைந்த அறைகலன் வடி வமைப்புகள் இந்த அறைகலன்கள், நேர்கோட்டு அமைப்புகளுடனும், மென்மையான முட்டை போன்ற நீளுருண்டை வடிவுடைய