பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mac

409

Mac


Machine glazed: மெருகேற்றிய தாள்: ஒருபக்கம் நன்கு மெருகேற்றப்பட்ட தாள்.

Machine molding: (வார் .) எந்திர வார்ப்படம்: வார்ப்புருவங்களைத் தயாரிப்பதற்கான வார்ப்படங்களை தனிவகை எந்திரங்களைப் பயன் படுத்தி உருவாக்குதல்.

Machine rating: (மின்.) எந்திர அறுதிப்பாடு: ஒர் எந்திரம் அளவுக்கு மீறிச் சூடாகிவிடாமல் விசையை அனுப்பும் திறன்.

Machinery :எந்திரத் தொகுதி: எந்திரக் கருவிக்கலன்களின் தொகுதி. ஒர் எந்திரத்தின் செயலுறு உறுப்புகளையும் குறிக்கும்.

Machinery stees: (எந்.) எந்திர எஃகு: திறந்த உலை முறையில் தயாரித்த எஃகு, இதில் 0. 15% முதல் 0, 25% கார்பன் கலந்திருக்கும். கடும் பதப்படுத்தக்கூடிய, ஆனால் செம்பதமாக்க முடியாத மென்மையான எஃகு அனைத்தை யும் இச்சொல் குறிக்கும்.

Machine screw; எந்திரத் திருகு: தெளிவான வெட்டுத் திருகிழைகளும் பல்வேறு தலைவடிவங்களும் கொண்ட திருகு வகை. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இந்தத் திருகு ஒரு மரையாணியுடனோ, மரையாணி இன்றியோ அமைந்திருக்கும்.

Machine tool: (பட்.) வெட்டுக் கருவி: கடைசல் எந்திரம், துரப்பன எந்திரம், இழைப்புளி, அரைவை எந்திரம் போன்ற வெட்டும் வகையைச் சேர்ந்த கருவிகள். இவை மற்ற எந்திரங்களைத் தயா ரிப்பதற்குப் பயன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்' என்று அழைக்கப்படுகின்றன.

Machining: எந்திர வேலைப்பாடு: உலோக வேலைப்பாடுகளில் எந்தி ரங்களினால் செய்யப்படும் நுட்ப வேலைப்பாடுகள்,

Machining allowance: (எந்.) மெருகுவேலை மிகைப்பகுதி: வெட்டுக் கருவிகளினால்மெருகு வேலைப்பாடு செய்வதற்கு வசதியாகப் போதிய அளவு விடப்படும் மிகைப் பகுதி.

Machinist: எந்திர இயக்குநர்: எந்திரக் கருவிகளை இயக்குபவர்.

Mach number: (வானூ.) ஒப்பு வேக எண்: உண்மையான காற்று வேகத்திற்கும் ஒலியின் வேகத்திற்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கும் எண். ஒலியை விடக் குறைந்த வேகத்திற்கான இந்த எண் ஒரு பின்னமாகும். ஒலியினும் மிகுதியான வேகத்திற்கு இந்த எண் ஒன்றுக்கு மேற்பட்டதாகும்.

Macro molecule: (குழை.) பெரு மூலக்கூறு: கரைதக்கை நிலைப் பண்புகளை வெளிப்படுத்து அனவுக்கு வடிவளவுள்ள ஒரு மூலக்கூறு.