பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Magnetic circuit

411

Megnetic induction


மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்று கருவி. மேற்பரப்பிணை அரச வித தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை நேர் மின்னோட்டத்தை மட்டுமே கொண்டு பயன்படுத்த முடியும்.

Magnetic circuit (மின்.) காந்தச் சுற்று வழி: ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஒர் இடைவெளியையும் கொண்டி ருக்கலாம்.

Magnetic circuit breaker : (மின்.) காந்தச்சுற்று வழிமுறிப்பான்: ஒரு கற்று வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு மின்காந்தச் சாதனம்.

Magnetic coil : (மின்.) காந்தச் சுருணை: ஒரு மின் காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின் னோட்டம் பாயும் போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும்.

Magnetic cutout: (மின்.) காந்த வெட்டுவாய்: ஒரு மின்சுற்று வழியை, அந்தச் சுற்று வழியின் ஒரு பகுதியை உருக்குவதற்குப் பதிலாக ஒரு மின்காந்தத்தின் மூலம் முறிப்பதற்கான ஒரு சாதனம்.

Magnetic deflection: காந்த

விலக்கம்: காந்தப் புலங்கள் மூலம் மட்டுப்படுத்தப்படும் எலெக்ட்ரான் கற்றையின் இயக்கம்.

Magnetic density: (மின்.) காந்த அடர்த்தி: பார்க்க பெருக் கடர்த்தி

Magnetic field: (மின்.) காந்தப் புலம்: ஒரு காந்தத்தின் அருகி லுள்ள இடப்பகுதி. இதன் வழியே காந்த விசைகள் செயற்படுகின்றன

Magnetic flux: (மின்.) காந்தப் பெருக்கடர்த்தி: மின் காந்தம், நிலைக்காந்தம் அல்லது கம்பிச் சுருள் மூலம் உருவாக்கப்படும் காந்தவிசைக் கோடுகள்.

Magnetic force: (மின்.) காந்த விசை: ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகச் செல்கிறவிசை,

Magnetic fuel pump, (தானி.) காந்த எரிபொருள் இறைப்பான்; வெற்றிட அமைப்பு முறையின் உதவியின்றி எரிபொருள் வழங்கு வதை முறைப்படுத்தும் மின்விசையால் இயங்கும் எந்திர இறைப்பான்.

Magnetic hoist: (மின்.) காந்தப் பாரந்தூக்கி: மின் காந்தத்தின் மூலம் பாரத்தைத் தூக்கும் ஒரு பாரந்தூக்கி எந்திரம்.

Megnetic induction; (மின்.) காந்தத் தூண்டல்: பாய்வுத் திசைக்குச் செங்குத்தாகவுள்ள குறுக்கு