பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Man

416

Mar


Mantel: (க.க.) தண்டயம்: அடுப்பங்கரையிலுள்ள தண்டயப் பலகை.

Mantissa: (கணி.) மடக்கைப் பதின்மானம்: இயற்கணிதத்தில் ஒரு மடக்கையின் தசமப்பகுதி அல்லது பின்னப்பகுதி.

Manual: (பட்.) (1) கையேடு: அறிவுறுத்தங்கள் அடங்கிய சிறு குறிப்பு ஏடு. (2) கைவேலை: கைகளால் செய்யப்படும் பணிகள்.

Manual arts: கைவேலைப்பாடு: கைகளினால் செய்யப்படும் நுட்பமான கலை வேலைப்பாடுகள்.

Manual switch: (தானி) ஆளியக்க விசை: உந்து ஊர்திகளில், கைகளால் அல்லது கால்களால் இயக்கப்படும் விசை. இது மற்ற வழிகளில் இயக்கப்படும் விசைக்கு மாறானது.

Manuscript: (அச்சு) எழுத்துப்படி: அச்சிடுவதற்குக் கையால் எழுதி அல்லது தட்டச்சு செய்து கெசடுக்கப்படும் மூல வரைபடி.

Marble: (க.க.) (1) சலவைக்கல், பளிங்குக்கல்: வெண்மை, கரும் பழுப்பு, பழுப்பு வண்ணங்களிலுள்ள ஒரு வகைச் சுண்ணாம்புக் கல் கட்டிடங்களின் உட்புற, வெளிப்புற அலங்கார வேலைப் பாடுகளுக்கு மிகுதியும் பயன்படுகிறது.

(2) பளிங்குத் தாள்: பளிங்குபோல் பளபளப்பாகத் தோற்றமளிக்கும் காகிதம்.

Marble dust: பளிங்குத் தூள்: அரைத்துத் தூளாக்கிய சுண்ணாம்புக்கல். மெருகு சுண்ணத்தாள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Marblíng: பளிங்கு வண்ணப் பூச்சு: பல்வண்ணச் சலவைக்கல் போல் தோற்றமளிக்கும் வகையில் மரத்தில் வண்ணம் பூசுதல்.

Margin: (அச்சு.) பக்க ஒரம்: அச்சுத்துறையில் பக்கங்களில் அச்சிடாது விடப்படும் பக்க ஓர இடம்.

Marginal note (அச்சு.) ஓரக் குறிப்பு: பக்கங்களின் ஓர இடத்தில் எழுதப்படும் குறிப்புகள்.

Marine glue: (மர.வே.) கடற் பசைப் பொருள்: ஒரு பகுதி கச்சா ரப்பர், இரு பகுதி அவலரக்கு, மூன்று பகுதி நிலக்கீல் கொண்ட பசைப் பொருள்.

Marking awl (மர.வே.) குறியிடு தமரூசி: கடினமான மரத்தில் குறி யிடுவதற்கான கூர்மையான எஃகுக் கருவி.

Marking machine: (மர. வே.) குறியிடு பொறி: வாணிக முத்திரைகள், புனைவுரிமைத் தேதிகள் ஆகியவற்றை வெட்டுகருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம்.