பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Mea

420

Mac


மின்னியக்க வரிசையில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் உண்டாகும் மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம்.

Mean : (கணி.) சராசரி : இயற் கணிதத்தில் இரண்டு எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள எண்.

Mean chord of a wing (வானூ.) இறகின் இடைநிலை இயைபளவு : விமானத்தில் இறகின் பரப்பளவை ஒர் இறகின் முனையிலிருந்து இன்னொரு இறகின் முனை வரையிலான இடையகல அளவினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவு.

Mean line : (வானூ.) இடை நிலைக் கோடு : விமானத்தின் உரு வரைப் படிவப் படத்தில் மேல்கீழ் உருவரைகளுக்கிடையிலான இடை நிலைக்கோடு.

Measure: (அச்சு.) அகலளவு : அச்சுக்கலையில் ஒரு பத்தியின் அல்லது அச்சுப் பக்கத்தின் அகலம் அல்லது ஒரு பணியின் அகலம்.

Measurement : அளவு : வடிவளவு; பரப்பளவு; கொள்ளளவு. அளவிடுதல்.

Measures: அளவைகள்: நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்ற அளவைகள். இவற்றில் மெட்ரிக் முறை, ஆங்கில முறை போன்ற முறைகள் உண்டு.

Measuring machine: (பட்.) அளவிடு எந்திரம்: தேவையான வடி

வத்திலுள்ள ஒரு நுண் அளவு மானி. இதனைக் கொண்டு குழாய்கள், துளைகள் முதலியவற்றை நுட்பமாக அளவிட உதவுகிறது. இவற்றுள் சில இப்போது எந்திர முறைகளுக்குப் பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்தி இயக்குகின்றன .

Measuring tape: அளவு நாடா: அளவுகள் குறிப்பிடப்பட்ட எஃகினாலான அல்லது நார்த் துணியினாலான நாடா. இது சாதாரணமாக 50"-100 நீள மிருக்கும். இதனைப் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுவோர், நில அளவையாளர்கள் போன்றோர் பயன்படுத்துகின்றனர்.

Mechanic: பொறிவினைஞர்: எந்திரங்களைப் பழுது பார்க்கிற அல்லது எந்திரங்களை அல்லது எந்திர உறுப்புகளை ஒருங்கிணைக்கிற தேர்ச்சிபெற்ற கைவினைஞர்.

Mechanical brakes: (தானி.) எந்திரத் தடை: உந்து ஊர்திகளிலுள்ள தடையமைப்பு முறை: இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச் சலாகைகள், நெம்புகோல்கள், இயக்கு சக்கரங்கள், ஊடச்சுகள் போன்றவற்றின் தொகுதி மூலம் அழுத்தம் செலுத்தப்படுகிறது.

Mechanical drawing : எந்திர வரைபடம்: கருவிகளைப் பயன்படுத்தி வரையப்படும் படம். எந்திரங்களின் வடிவமைப்புகள் இவ்வாறு வரைபடமாக வரையப்படுகின்றன.