பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Med

421

Mer


Mechanical efficiency: (எந்.) எந்திரத் திறன்: (1) ஓர் எஞ்சினின் எந்திரத்திறன் என்பது, அதன் தடைக் குதிரை விசைக்கும், அதன் குறிப்பிடப்பட்ட குதிரை விசைக்குமிடையிலான விகிதமாகும்.

எந்திரத்திறன் = தடைக்குதிரை விசை / குறிப்பிடப்பட்ட குதிரை விசை

(2) இயற்பியலில், உட்பாட்டுக் கும் வெளிப்பாட்டுக்குமிடையிலான விகிதம்.

வெளிப்பாடு / உட்பாடு = எந்திரத் திறன்

Mechanical engineer: எந்திரப் பொறியாளர்: எந்திரங்களை அல்லது எந்திர சாதனங்களை வடிவமைத்து உருவாக்கிப் பயன்படுத்துவதில் வல்லுநர்.

Mechanical engineering: எந்திரப் பொறியியல்: விசையை உற்பத்தி செய்து அனுப்பும் எந்திர சாதனங்களை வடிவமைத்து, உருவாக்குதல் தொடர்பான அறிவியல்.

Mechanical vibrator: (மின்.) எந்திர அதிர்ப்பி: எந்திர முறையில் இயங்கும் ஆக்கும்-அழிக்கும் சாதனம்.

Mechanic arts: கம்மியர் கலை: கைவினையில் பட்டறையிலும், கருவிகளிலும், எந்திரத்திலும் பயிற்சி பெறுதல்.

Mechanics:இயக்கவியல்: பொருள்களின் மீது விசையின் விளைவு

பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு.

Medaleion: (க.க.) பதக்கம் : (1) பட்டாத் தகடு.

(2) ஒரு பெரிய பதக்கம்.

Median: மைய நிலை: நடுவூடான நிலை; சராசரி.

Medium carbon steel: நடுத்தர கார்பன் எஃகு: 0.80% முதல் 0.70% வரை கார்பன் அடங்கிய எஃகு.

Meg or mega: (மின்.) பத்து லட்சம்: மின்னியலில் பத்து லட்சம் அளவினைக் குறிக்கும் சொல்.

Mega volt (மின்.) நூறுகோடி ஒல்ட்: மின்னியலில் பத்துலட்சம் ஒல்ட் மின்னியக்க விசையைக் குறிக்கும் அலகு.

Megohm: மெக்ஓம்: மின்னியலில் பத்து லட்சம் ஓம்களுக்குச் சமமான மின்தடையைக் குறிக்கும் அலகு.

Melting point: (உலோ.) உருகு நிலை: உலோகங்கள் திடநிலையிருந்து திரவநிலைக்கு மாறுவதற்குரிய வெப்பநிலை.

Melting zone: (வார். ) உருகு மண்டலம் : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில், உலோகம் உருகுவதற்கான ஊதுலைக் குழாய்களுக்கு மேலுள்ள பகுதி.

Mensuration: (கணி.) உரு அளவியல்: நீளம், பரப்பு, கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான கணிதப் பிரிவு.

Mer: (குழை.) மீச்சேர்ம கட்டலகு:மீச்சேர்மத்தின் கட்டுமான அலகு