பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mer

422

Met


Mercerize :(வேதி.) துணிப் பக்குவமாக்குதல்: நூல், துணி ஆகியவற்றுக்குப் பளபளப்பும் உறுதியும் கொடுப்பதற்காகக் கடுங்கார உப்பிட்டுப் பக்குவப்படுத்துதல்.

Merchant bar: (உலோ.) வாணிக இரும்புச் சலாகை: விற்பனை செய்வ தற்கு ஏற்பக் குறுகலாக வெட்டப் பட்ட இரும்புச் சலாகை.

Mercury: (வேதி.) பாதரசம் : வெள்ளிபோல் வெண்ணிறமான திரவ உலோகம். இதன் எடை மானம் 13.6. இரசக் கந்தகை அல்லது பாதரச சல்ஃபைடு (HgS) மூலம் கிடைக்கிறது. சிவப்புப் படிக வடிவில் கிடைக்கிறது. இரசக் கலவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Mercury arc rectifier; (மின்.) பாதரசச் சுடர் திருத்தி: மாற்று மின் னோட்டத்தை நேர் மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பீட்டர்கூப்பர் ஹெவிட் கண்டுபிடித்த ஒரு சாதனம்.

Marcury vapor lamp: (மின்.) பாதரச ஆவி விளக்கு: கூப்பர் ஹெவிட் உருவாக்கிய விளக்கு. இதில் பாதரச ஆவி வழியே மின்னோட்டம் செலுத்துவதன் மூலம் விளக்கு உண்டாக்கப்படுகிறது.

Mesh : (பட்.) வலைக்கண்: வலைப் பின்னல் அமைப்பு.

Mesocolloids: (வேதி.) மெசோ கொலாய்டுகள்: ஹெமி கொலாய்டுகளுக்கும் யூகொலாய்டுகளுக்கும்

இடைப்பட்ட மீச்சேர்மங்கள்.அதாவது, 100 முதல் 1000 வரையில் மீச்சேர்ம இணைவுடையவை.

Metal: உலோகம் : அடிப்படையான உலோகப் பொருள்களை மட்டுமின்றி, ஒரு திறன். நெகிழ் திறன், இணைவுத் திறன் முதலிய உலோகப் பண்புகளுடைய தாதுப் பொருள்களையும் குறிக்கும். பல்வேறு உலோகக் கலவைகளையும் குறிக்கும்.

Metal arc welding : உலோகச் சுடர் பற்றவைப்பு: இது ஒரு வகை சுடர் பற்றவைப்பு. இதில் பற்றாக இட்டு நிரப்புவதற்கான உலோகத்தை மின்முனை அளிக்கிறது.

Metal dip brazing : உலோக அமிழ்வுப் பற்றரசு இணைப்பு : உருக்கிய உலோகத்தில் அமிழ் வித்து நிரப்பு உலோகத்தைப் பெறுவதற்குரிய ஒரு செய்முறை.

Metalene nails : உலோகப் பொருத்தாணி: வட்டமான அல்லது தட்டையான பெரிய கொண்டைகளையுடைய ஆனிகள். அறைகலன்களில் தோல் இழைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

Metal filament : (மின்.) : உலோக இழை: ஒரு வகை மின் கடத்தி. இதனை வெண்சுடர் விளக்கில் சூடாக்கும் போது இது ஒளியுடன் எரியும்.

MetaI finishing : உலோக மெருகிடல்: உலோக வேலைப்பாட்