பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mic

425

Mic



முதல் மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தள மாடி .

Mezzotint ! (அச்சு.) முருட்டு அச்சுப் பாளம் : கரடு முரடாக்கப் பட்ட தகட்டின் பின்னணியையே செறிநிழல் வண்ணமாகக்கொண்டு பிற பகுதிகளில் கரடு முரடு நீக்கப் பட்ட ஒளி நிழற்பட அச்சுப்பாளம். இதனை 1648இல் லுட்விக் கண்டு பிடித்தார்.

Mica : (கனிம.) அப்பிரகம் (காக்காய்ப் பொன்): முழுமையாகப் பிளந்திடும் தன்மையுடைய ஒரு வகை சிலிக்கேட் என்னும் மணற் சத்து உப்பு. இது செதில் செதில் களாகப் பிளவுபடும்.

Micas: அப்பிரகக் காகிதம்: அலங் காரப் பெட்டிகள் செய்வதற்கான காகிதம். இதில் அனிலைன் சாயப் பொருளுடன் கலந்து அப்பிரகம் பூச்சுக் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் செதுக்கு வேலைப்பாடாக வும் புடைப்பாாவும் அச்சிடப்படும்.

Micro ampere: (மின் .) மைக்ரோ ஆம்பியர்: ஒரு ஆம்பியரில் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஆம்பியர்.

Micro farad: (மின்.) மைக்ரோ ஃபாராட்: ஒரு கொள்ளளவு அலகு. மின் காந்தப் பரும அளவான ஒரு ஃபாராடின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி.

Micrometer  : நுண்ணளவி மானி: துண்பொருள்கள், தொலைவுகள், கோணங்கள் ஆகியவற்றைத் துல்லியமாக அளந்து காட்டுங்கருவி.

Micrometer caliper: நுண் இடுக்கியளவி: மிக நுண்ணிய தொலைவு களை அளப்பதற்குரிய, அளவு வரையிட்ட திருகுடன் கூடிய ஒர் இடுக்கியளவி.

Micron ; (மின்.) மைக்ரோன்: பதின்மான நீட்டலளவை அலகில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி.

Microphone : (மின்.) ஒலி பெருக்கி : நுண்ண்ணொலிகளைத் திட் பப்படுத்தியும், ஒலிகளை மின் னலைகளாக்கியும் தொலைபேசி ஒலிபெருக்கிகளைச் செயற்படுத் துங் கருவி.

Microscope : நுண்ணோக்காடி (பூதக் கண்ணாடி): மிக நுண்ணிய பொருள்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி.

Microvolt  : (மின்.) மைக்ரோ வோல்ட்: மின் இயக்க ஆற்றல் அலகின் பத்துலட்சத்தில் ஒரு பகுதி. 0.000001 ஓல்ட்.

Microwave :நுண்ணலை: மீட்டருக்குக் குறைவான நீள முள்ள வானொலி அலைகள். இது நெடுந்தொலை விலுள்ள கருவிகளை நிலையத்துடனும், நிலையங்களை மற்ற நிலையங்களுடனும் இணைப்பதற்குப் பயன்படுகிறது,