பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Mic

426

Mil


Microwave reflectors: நுண்ணலைப் பிரதிபலிப்பான்: நுண்ணலைக் கற்றைகளை நெறிப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரே மாதிரியல்லாத பிரதிபலிப்பான்கள்.


Middle space : (அச்சு.) நடு இடைவெளி : அச்சுக்கோப்பில் எழுத்துகளிடையிலான இடை வெளி.

Middle - tones : (அச்சு.) நடுவண்ணச் சாயல்: ஒளிப்படத்தில் அல்லது நுண்பதிவுப் படத்தில் இளம் வண்ணத்திற்கும் அடர் வண்ணத்திற்குமிடையிலான வண்ணச் சாயல்கள்.

Midwing monoplane: (வானூ.) கடுக்கிறகு ஒற்றைத்தட்டு விமானம்: விமானத்தின் மையக் கோட்டில் இறகு பொருந்தப்பட்டுள்ள ஒற்றைத் தொகுதி சிறகுகளையுடைய விமானம்.

Mil : மில்: கம்பி முதலியவற்றின் விட்டத்தை அளப்பதற்கான அலகு. இது அங்குலத்தில் ஆயிரத் தில் ஒரு பகுதி, 0.001",

Mild steel: மேன்னெஃகு: கரியம் குறைவாகவுள்ள எஃகு; இது பற்ற வைக்கக் கூடியது. ஆனால் இது பதமாவதில்லை.

Mildew : பூஞ்சணம் : ஈரம்படும் பொருள்களின் மீது படியும் ஒரு வகை பூஞ்சக்காளான்.

Mil foot: மில் அடி: கம்பியிலுள்ள மின் தடையின் ஒரு தர அலகு. ஓர் அடிகம்பியில் மின் தடையின் அளவு = விட்டத்தில் ஒரு மில்.

Milk sugar: (வேதி.) பால் சர்க்கரை : பார்க்க : பால் வெல்லம்.

Mill: ஆலை : (1) உற்பத்திச் செய் முறைகள் நடைபெறுவதற்கான எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடம் அல்லது கட்டிடங்களின் தொகுதி. பல்வேறு தொழிற்சாலை களைக் குறிப்பிட இச் சொல் பயன் படுகிறது.

(2) செய்முறை வேலைகளுக்கான திரிகைப் பொறியமைவு.

<b?Milli ampere: (மின்.) மில்லி ஆம்பியர்: ஒரு ஹென்ரியில் ஆயிரத்தில் ஒரு பகுதி. கொள்ளளவின் ஓர் அலகு.

Millimeter: (பொறி.) மில்லிமீட்டர்: பருமணலளவு அலகு. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒருபகுதி, 03937."

Milling : (பட்.) சால்வரிவிடல் : உலோகத் தகடுகளில் பள்ளங்களை வெட்டும் செய்முறை.

Milling cutters: (எந்.) துளை வெட்டுங்கருவி : உலோகத் தகட்டில் துளைகள் இடுவதற்கான எந்திரத்தில் பயன்படும் பல்வேறு சுழல் வெட்டுக் கருவிகள்.

Milling machine: (பட்..) துளையிடு எந்திரம் : உலோகத் தகட்டில் வடு வரிசைத் துளைகள் இடுவதற்கான எந்திரம்,