பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mod

489

Moh


பதற்கு ரம்பத்திற்குத் துணை செய்யும் அமைவுடன் பயன்படுத்தப்படும் ஒரு தளம்.

Miter-saw cut (மர.வே.) கோண வெட்டு ரம்பம்: மரத்தைத் தேவையான கோணத்தில் வெட்டு வதற்குப் பயன்படும் ரம்பம்,

Miter square: (மர.) கோண மட்டச் சதுர்ம்: மூலமட்டப் பலகை போன்ற ஒரு கருவி. ஆனால், இதில் 90°,45° கோணங்களை அமைக்க இடமளிக்கும் ஒரு தலைப் பினைக் கொண்டது.

Miter wheel: சாய் பற்சக்கரங்கள்: ஊடச்சுக்கு 45° சாய்வாக உள்ள பற்களையுடைய சக்கரங்கள்.

Mitography: (அச்சு,) திரையச்சுக்கலை: பட்டுத்திரைச் சீலை அச்சுக் கலை,

Mixture (வேதி.) கலவை: வேதியியல் முறையில் ஒன்றோடொன்று இணையாத இரண்டு அல்லது மூன்று பொருள்களின் கலவை.

M.M.F.: காந்த இயக்குவிசை: (கா.இ.வி).

Modeling: உருப்படிவக்கலை:காட்சி மாதிரிகளை உருநிலைப் படிவங்களாக உருவாக்குதல்.

Mock-up.: (வானூ.) எந்திர மாதிரிப் படிவம்: செய்யக் கருதியுள்ள மாதிரிப் படிவம்.

Modulation : அலை மாற்றம்: வானொலியில் அலையகலஅதிர்வு, அதிர்வு மாற்றமைப்பு.

Module: (க.க) அளவை அலகு: கட்டுமானப் பொருள்களின் தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.

Modulus நிலை தகவு: மடக்கைகளின் வகை மாற்றத்திற்கான நிலையான வாய்ப்பாடு.

Modulus of elasticity : மின் விசை நிலை தகவு: இழுவிசைத் திரிபு தெகிழ் வரம்பிற்குள் இருக்கும்போது, ஒர் அலகுப்பரப்பின் மீதான அழுத்தத்திற்கும், அதற்கு இணையான ஓர் அலகு நீளத்தின் மீதான இழு விசைக்குமிடையிலான வீத அளவு.

Modulus of rigidity to (பொறி.) விறைப்பு நிலைதகவு : அழுத்தச் சறுக்குப் பெயர்ச்சி இழு விசையினால் சறுக்குப் பெயர்ச்சி அழுத்தத்தை வகுப்பதால் கிடைக்கும் ஈவு.

Mogul , (மின்.) மோகல் : 800 வாட்டுகளுக்கு அதிகமான பெரிய வெண்சுடர் விளக்குகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஒரு குதை குழி அல்லது கொள்கலன்.

Mohair : ஆங்கோரா ஆட்டுக் கம்பளி : ஆங்கோர ஆட்டுமயிரைக் கொண்டு செய்யப்படும் நேர்த்தியான துணி வகை.

Mohs scale : மோஹ்ஸ் அளவு : கனிமப் பொருள்களின் கடினத்