பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mot

434

Mov


வண்டியில் ஒரு தனிப் பெட்டியில் அல்லது ஒரு தனிச்சேணத்தில் ஒருங்கிணைத்து வைத்த கருவி களின் ஒரு தொகுதி. இதன் மூலம் நீள் உருளை அழுத்தம், காற்று -எரி பொருள், அனல் மூட்டும் நேரம் ஆகியவற்றைச் சரிபார்க்க லாம்.

Motor drive : (பட்.) மின்னோடி விசை : ஓர் எந்திரத்திற்கு ஒரு மின்னோடியின் மூலம் மின் விசையளிக்கும் நவீன முறை. இது எந்திரத்துடன் நேரடியாக இணைக்கப் பட்டிருக்கும் Motor generator : (மின்.) மின்னோடி மின்னாக்கி : ஒரு மின்னாக்கியை இயக்கும் மின்னோடி. இது மாற்று மின்னோட்டத்தை நேர் மின்னோட்டமாகவும், நேர் மின்னோட்டத்தை மாற்று மின்னோட்டமாகவும் மாற்றுவதன் மூலம் மின்னாக்கியை இயக்குகிறது.

Motor hoist : இயக்கு உயர்த்தி : கையினாலோ விசையினாலோ இயக்கப்படும் பாரந் தூக்கிச் சாதனம்.

Motor jet : (வானூ.) [1] மின்னோடித் தாரை : எதிரீட்டு வாயு எஞ்சின் மூலம் இயங்கும் அழுத்தியினைக் கொண்ட ஒரு தாரை எஞ்சின்.

(2) இத்தகைய எஞ்சின் உடைய ஒரு விமானம்.

Motor starter : (மின்.) மின்னோ

டித் தொடக்கி : தொடக்க இயக்கத்தைச் செய்வதற்காக ஒரு மின்னோடியுடன் இணைக்கப்பட்டுள்ள மாற்றுத் தடைப்பெட்டி. இதில் மின்னோடியின் வேகம் அதிகரிக்க அதி கரிக்க தடை குறைந்து, இறுதியில் சுற்று வழியிலிருந்து முற்றிலுமாக நீங்கி விடும்.

Motor torque : (மின்.) மின்னோடி முறுக்குப் பதக்கம் : ஒரு மின்னோடியில் சுழற்சியை அல்லது சுழலும் போக்கினை உண்டாக்கும் திருகு முயற்சி அல்லது திருகு விசை

Mottled : பல் வண்ணப் புள்ளியமைவு : பல் வண்ணப் பட்டை கள் அல்லது புள்ளிகள் இட்ட அமைவு.வேண்டுமென்றே பல்வேறு வண்ணக்கோலங்களில் தயாரிக்கப்பட்ட பரப்புடைய காகிதம்.

Mount : ஒப்பனைச் சட்டம் : அறைகலனை வலுவாகப் பொருத்துவதற்குரிய அலங்கார ஒப்பனைச் சட்டம். இது பெரும்பாலும் உலோகத்தில் அமைந்திருக்கும்.

Movieola : திரைப்படத் தொகுப்பான் : திரைப்படத்தைத் தொகுப்பதற்குப் பயன்படும் ஒரு திரைப்படச் சாதனம்.

Moving - coil galvanometer : (மின்.) இயங்கு சுருள் மின்னோட்ட மானி : ஒரு நிரந்தரக் காந்தத்