பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Mul

438

Mul


Multi filament lamp : (மின்.) பல இழை விளக்கு: பெரிய வெண்சுடர் விளக்குகள் பெரும்பாலும் பல இழைகளுடன் தயாரிக்கப்படுகின்றன. இந்த இழைகள் இணை யாக அமைந்திருக்கும். இதனால் ஓர் இழை எரிந்துபோனாலும், விளக்கு தொடர்ந்து எரியும்.

Multigraph : தட்டச்செழுத்துச் சாதனம் : கடிதங்களையும் ஆவணங்களையும் தட்டச்சு செய்த படிகள் போல் தோன்றுமாறு அச்சடிக்கவல்ல ஒரு சாதனம் ,

Multigraph paper : தட்டச்செழுத்துக் காகிதம் : தட்டச் செழுத்துச் சாதனத்தில் பயன்படுத்துவதற்குரிய காகிதம்.

Multipart bearings: (எந்.) பல உறுப்புத் தாங்கிகள் : எந்திரததில் இருசுக் கட்டையுடன் இணைந்துள்ள மூன்று அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பகுதிகளைக் கொண்ட தாங்கிகள் . இவை எண்ணெய்ப் படலத்தைப் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடங்கியிருக்கும். இந்த வகைத் தாங்கிகள் ஒரு பெட்டிக்குள் அடக்கியிருக்கும. கனரக எந்திரங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

Multiplane : (வானூ.) பல தட்டு விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆதாரத் தட்டுகளைக் கொண்ட விமானம்.

Multiple : பன்மடங்கு : பல் கூறுகளானது : எண்ணின் பல மடங்கு ; மீதமின்றி ஓர் எண்ணால் வகுக்கப்படத்தக்க தொகை

Multiple disk clutch : (தானி.) பன்முக வட்ட ஊடினைப்பி : பன்முக வட்ட தட்டுகளைக் கொண்ட ஊடிணைப்பி. இதில் ஒரு தொகுதி இயங்குவதாகவும், இன்னொரு தொகுதி இயங்குவதாகவும் அமைந்திருக்கும். அழுததப்பட்ட சுருணை விற்கருள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஊடிணைப்பி மிதி கட்டையை அழுத்துவதன் மூலம் ஊடிணைப்பி விடுவிக்கப்படுகிறது. இந்த ஊடிணைப்பிகள் உலர், ஊடிணைப்பி, ஈர ஊடிணைப்பி என இருவகைப்படும்.

Multiple drilling machine : பன்முகத் துரப்பன எந்திரம் : ஒன்றுக்கொன்று இணையாகப் பல துரப் பணக் கதிர்கள் அமைக்கப்பட் டுள்ள ஓர் எந்திரம். இவை ஒரே சமயத்தில் இயக்கப்படும்.

Multiple projection welding : பன்முக வீச்சுப் பற்றவைப்பு : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பற்றாசுகளை ஒரே சமயத்தில் இயங்கச் செய்யும் முறை.

Multiple sếries, (மின்.) பன்முகத் தொடர் மின்சுற்று வழி : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தொடர் மின் சுற்று வழிகளின் ஒரிணையான இணைப்பு.

Mustiple - threaded screw : (எந்.) பன்முக இழைத்திருகு : தனது