பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Nac

438

Nap


N

N. A. C. A. cowling : (வானூ.) என். ஏ. சி. ஏ. மேல்மூடி : வானூர்தி எந்திரத்தின் ஒருவகை மேல்மூடி இது காற்றினால் குளிர்விக்கப்படும் கதிர்களைப் போலமைந்த எஞ்சினை மூடியிருக்கும். இதில் ஒரு தலைச்சீரா அல்லது வளையம் இருக்கும். இதுவும், உடற்பகுதியின் பின்புறமுள்ள ஒருபகுதியும், குளிர்விக்கும் காற்று தலைச் சீராவின் முன் முறம் வழியாக உட் சென்று, உடற் பகுதிக்கும் தலைச் சீராவின் பின்பகுதிக்குமிடையிலான வழவழப்பான கோண வடிவப் பள்ளத்தின் வழியே வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

Nacelle : (வானூ.) விமான எந்திர வேயுறை : பயணிகளுக்கான அல்லது மின் எந்திரத்திற்கான அடைக்கப்பட்ட காப்பிடம். இது பொதுவாக விமானத்தின் கட்டு மானச் சட்டத்தைவிடக் குறுகலாக இருக்கும். இதில் வால் பகுதி இருக்காது.

Nail : ஆணி : மெல்லிய உலோகத் துண்டு. இதன் ஒரு முனை கூர்மையாகவும், இன்னொருமுனை தட்டையான அல்லது உருண்டையான கொண்டையினையும் கொண்டிருக்கும். மரத் துண்டுகளையும், பிற பொருட்களையும் இணைக்க இது பயன்படுகிறது. இணைக்க வேண்டிய பொருட்களைப் பொருத்தி ஆன்னியின் கொண்டையில் அடித்துப் பிணைக் கலாம்.

Nail puller : (எந்.) ஆணிக் குறடு ; (1) ஆணி பிடுங்கப் பயன்படும் ஒரு கருவி. இது இரு கவர்முனைகளைக் கொண்டிருக்கும். கவர் இடைவெளியை ஆணியின் கொண்டைக்குக் கீழே கொடுத்து நெம்பி ஆணியைப் பிடுங்கலாம்.

(2) இரு தாடைகள் கொண்ட ஒரு எந்திர சாதனம். இது மரத்தில் அறையப்பட்டுள்ள ஆணியைப் பிடுங்குவதற்கு ஒரு நெம்பு கோலாகப் பயன்படுகிறது.

Nail set : (மர.வே.) ஆணித் தண்டு : 4" அல்லது 5" நீளமுள்ள ஒரு சிறிய எஃகுத் தண்டு. இதன் ஒரு முனை நுனி நோக்கிச் சிறுத்தும் ஆணியின் கொண்டை வழியே கழன்று விடாதவாறு சற்றே கிண்ண வடிவிலும் அமைந்திருக்கும். ஆணியின் கொண்டையை மேற்பரப்புக்குக் கீழே செலுத்துவதற்குப் பயன்படுகிறது.

Naphtha : (வேதி.) இரச கற்பூரத் தைலம் : பெட்ரோலியத்திலிருந்து கேசோலினுக்கும் பென்சீனுக்குமிடையே வடித்து இறக்கப்படும் பொருள். இது தூய்மைப்படுத்தும் பொருளாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.