பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nic

444

Nod


Nickel silver:நிக்கல் வெள்ளி : இதனை ஜெர்மன் வெள்ளி என்றும் கூறுவர். செம்பு, நிக்கல், துத்த நாகம் கலந்த உலோகக் கலவை.

Nickel steel: (பொறி.) நிக்கல் எ.கு: 3.5% நிக்கல் அடங்கிய எஃகு. மிக வலிமை வாய்ந்தது; முறையாகச் சூடக்கிப் பக்குவப்படுத்தினால் திண்மையாக இருக்கும.

Nickel-tantalum alloy: (வேதி.) நிக்கல் டாண்டாலம் உலோகக் கலவை : 70% நிக்கல், 80% டாண்டாலம் அடங்கிய கடினமான, ஆனால் ஒசிவுத்தன்மையுடைய உலோகக் கலவை. மின் தடைக்கம்பிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Nitrate: (வேதி.) நைட்ரேட்டு:

(1) நைட்ரிக் அமிலத்தின் உப்புப் பொருள் சில்வர் நைட்ரேட்டு இந்த வகையைச் சேர்ந்தது.

(2) நைட்ரிக் அமிலத்துடன் அல்லது ஒரு கூட்டுப் பொருளுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற் பொருள்.

Nitric (வேதி) நைட்ரிக்: நைட்ரஜனிலிருந்து அல்லது நைட்ரஜன் தொடர்பான பொருள்.

Nitric acid: (வேதி.) நைட்ரிக் அமிலம்: சோடியம் அல்லது பொட்டாசியம் நைட்ரேட்டைக் கந்தக அமிலத்துடன் கலந்து சிதைத்து வடிப்பதால் உண்டாகும் அமிலம்.

நிறமற்றது. மிகுந்த அரிக்கும் தன்மை கொண்டது.

Nitriding: (வேதி.) நைட்ரஜனேற்றம்: இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளில் நைட்ரஜனை ஏற்றும் செய்முறை. உலோகக் கலவையை அம்மோனியா வாயுவுடனோ வேறேதேனும் நைட்ரஜனியப் பொருளுடனோ கலந்து சூடாக்குவதன் மூலம் நைட்ரஜன் ஏற்றலாம்.

Nitrojen : (வேதி.) நைட்ரஜன்: காற்று மண்டலத்தில் ஐந்தில் நான்கு பகுதியாகவுள்ள வாயுத் தனிமம் நிறமற்றது; மணமற்றது.

Nitroglycerin: (வேதி.) நைட்ரோ கிளிசரின்: வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட் கலவை நீர்மம். இளமஞ்சள் நிறத்திலோ நிறமற்றதாகவோ இருக்கும். எண்ணெய்ப்பசையுடையது. கிளிசரின், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மிகுந்த வெடிப்பாற்றல் வாய்ந்தது. களிமண்ணுடன் கலந்து சுரங்க வெடி தயாரிக்கப்படுகிறது.

Noble metal (வேதி.) துருப்படாத உலோகம்: விலையுயர்ந்த அல்லது தூய உலோகத்தைக் குறிக்கும் சொல். எளிதில் துருப்பிடிக்காத உலோகங்களையும் குறிக்கும்.

Nodes: (மின்.) அதிர்வு மையப் புள்ளி: அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப் புள்ளி.

Noheet metal: செம்பத உலோகம் : இதனைச் "செம்பத ஈயம்" என்