பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Nor

446

Nor


பைகள், காற்றறைப்பைகள் போன்றவற்றிலுள்ள அக அழுத்தத்தின் மூலம் மட்டுமே வடிவம் பராமரிக்கப்படும் ஒரு வான்கலம்.

Nordberg key: (எந்.) நார்ட்பெர்க் திறவுகோல்: சக்கரத்தின் குடத்தைச் சுழல்தண்டுடன் பிணைத்துப் பூட்டுவதற்கான வட்டவடிவத் திறவுகோல். இது அடிக்கு 1/16" என்ற அளவில் நுனிநோக்கிச் சிறுத்திருக்கும். பெரிய விட்டம சுழல்தண்டின் விட்டத்தில் 1/4 பகுதி 6 வரை இருக்கும. பெரிய வடி வளவுகளில் : இத் திறவுகோல் சுழல்தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும். பெரிய வடிவளவுகளில், இத் திறவுகோல் சுழல்தண்டின் விட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதி என்ற அளவில் இருக்கும்.

Normal: இயல்பளவு : நிலைநாட்டப்பட்ட சட்டம் அல்லது விதிக்கிணங்க அமைந்துள்ள நிலை.

(2) செங்குத்துக்கோடு: (கணி.)ஒரு வளைவுக்குச் செங்குத்தாக இருக்கும் ஒரு கோடு.

Normalizing: (பொறி.) இயல்பாக்குதல்: எஃகினை உயர்ந்த மாறுநிலை வெப்பத்திற்குக் கூடுதலாகச் சூடாக்கி, காற்றில் குளிர்வித்தல்.

Normal loop: (வானு.) இயல்புக் கரண வளைவு: விமானம் இயல்பாகப் பறப்பதிலிருந்து தொடங்கி, ஏறி, தலைகீழாகக் கவிழ்ந்து, சறுக்கிப் பாய்ந்து மீண்டும் இயல்பாகப் பறக்கும் நிலைக்கு வருதல்.

Normal or three-point landing: இயல்பான அல்லது மும்முனைத் தரையிறக்கம்: தரையிறங்கும் பரப்பிற்குத் தொடுவரைபோற் செல்கிற ஒரு பாதையில் தறையிறங்குதல். இதில் பறக்கும் வேகத்தில் ஏறத்தாழத் தொடுங்கணத்திலேயே ஏற்படுகிறது.

Normal solution: (வேதி,) இயல்புக் கரைசல்: ஒர் அமிலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. கரைசலுக்கு ஒரு கிராம் ஹைடிரஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள்: 1000 க.செ. மீ.யில் 86.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ மீ.யில் 49 கிராம் கந்தக அமிலம் (H2 SO4), உற்பத்தியாகும் ஹைட்ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக்கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயலபுக் கரைசலில் 1000 க.செ.மீ.யில் 17 கிராம் ஹைட்ராக்கில் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம் சோடியம் ஹைட்ராக்சைடு.

Normal spín: (வானு.)இயல்பு சுழற்சி: விமானம் அனைத்துக் கட்டுப்பாடுகளுக்கும் எதிர்மாறாக இயல்பான நிலையிலிருந்து சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம். இதனைக் 'கட்டுப்படுத்திய' சுழற்சி என்றும் அழைப்பர்.