பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nos

447

Nuc


Norman : (க.க.) நார்மானிய கட்டிடக் கலை: நார்மானியர் இங்கிலாந்தை வெற்றி கொண்ட பின்னர் இங்கிலாந்தில் உயர் நிலையை எட்டிய நார்மானிய பாணிக் கட்டிடக் கலை,

Nose : (பட்.) அலகு : ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றின் கூர்மையான அலகுப்பகுதி. கடைசல் எந்திரத்தின் திருகிழை முனை, துளையிடு எந்திரத்தின் கதிர், துரப்பணத்தின் கூர் அலகு போன்றவை இதற்கு எடுத்துக் காட்டு.

Nose - down : (வானூ.) கீழ் நோக்கிப் நோக்கிப் பாய்தல் : பறக்கும் விமானத்தின் கூம்புப் பகுதியைக் கீழ் நோக்கிப் பாயும்படி செய்தல்.

Nose heavy : (வானூ.) கூம்பு இறக்கம் : விமானம் இயல்பாகப் பறக்கும் போது, அதன் கூம்புப் பகுதி கீழ் நோக்கி இறங்கும் போக்கு.

Nose - over : (வானூ.) கூம்பு ஏற்றம் : விமானம் தரையிறங்கும் போது அதன் கூம்புப் பகுதி தற்செயலாக மேல் நோக்கித் திரும்புவதைக் குறிக்கும் சொல்.

Nose-up : (வானூ.) கூம்பு உயர்வு: பறக்கு விமானத்தின் கூம்புப் பகுதியை உயர்த்துதல்.

Nose wheel : (வானூ.) கூம்புச் சக்கரம் : விமானத்தின் கூம்புப் பகுதியினைத் தாங்குவதற்காக முதன்மைச் சக்கரங்களுக்கு முன்னே அமைக்கப் பட்டுள்ள, திசையறிந்து திருப்பத்தக்க சக்கரம்.

Nosing ; (க.க.) படி வரிசை : படி வரிசை விளிம்பின் உலோக முகப்பு.

Notation : குறிமான முறை : குறியீடுகள், சைகைகள், உருவங்கள், எழுத்துகள் போன்றவற்றால் செய்திகளைத் தெரிவிக்கும் முறை.

Notching machine: வடுவெட்டுக் கருவி : உலோகத் தகடுகளில் வடுத்தடங்களை வெட்டவும், விளிம்புகளை மட்டப்படுத்தவும் பயன்படும் கருவி.

Novolak: {வேதி; குழை.) நோவோலக்: நிரந்தரமாக உருகி இளகக் கூடியதும், கரையத் தக்கதுமான ஃபினோ லால்டிஹைட் பிசின். பினாலின் ஒரு மூலக்கூறுடன், ஃபார்மாடிஹைடின் ஒன்றுக்குக் குறைவான மூலக் கூற்றுடனும். ஓர் அமில வினையூக்கியுடனும் வினைபுரிவதன் மூலம் கிடைக்கும் விளைபொருள் இது.

Nozzle: (எந்.பொறி.) கூம்பலகு: நீள் குழாயின் குழாய் முனை போன்ற கூம்பலகு.

Nuclear energy : (இயற்.) அணு ஆற்றல்: அணுவியல் வினையில் வெளிப்படும் ஆற்றல்.

Nuclear turbojet: (வானூ.) அணுவியல் விசையாழி: விசையாழி