பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Nuc

448

Nyl


யின் வழியாகவரும் காற்றினைச் சூடாக்குவதற்காக, உள்ளெரி அறைக்குப் பதிலாக, ஒர் அணு உலையைக் கொண்டிருக்கிற விசையாழி.

Nucleus: (வேதி.) மையக்கரு: அணுவின் உள்மையத்தில் செறிந்துள்ள அணுத்திரள். இதில் நியூட்ரான்களும், புரோட்டான்களும் செறிந்து சேர்ந்திருக்கும்.

Number drills:(உலோ.வே.) எண்ணிட்ட துரப்பணம்:1 முதல் 80 வரையில் எண்ணிடப்பட்ட சிறிய துரப்பணங்கள். இவற்றின் விட்டம் ஒர் அங்குலத்தின் ஆயிரங்களின் பகுதியாகக் குறிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 1 ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.228"; 80ஆம் எண் துரப்பணத்தின் விட்டம் 0.0135",

Numbering machine: இலக்கமிடும் எந்திரம்: காசோலைகள், அனுமதிச் சீட்டுகள் முதலியவற்றில் தொடர்ச்சியாக இலக்கங்களை முத்திரையிடும் எந்திரம் அல்லது சாதனம்.

Numerals: (அச்சு.) எண்குறி : எண் குறித்த இலக்கத் தொகுதி. பெருவழக்காகப் பயன்படுவது 1,2,3,4,5,6,7,8.9.0 என்ற அராபிய எண் குறிகள். ரோமானிய எண்கள்: 1 (1), V (5), L (60), c (100, D (500). М (1000).

Numerator: (1) பின் மேல் இலக்கம்: பின்னத்தில் மேல் இலக்கத்தின் பகுதிகளைக் குறிக்கும்.

(2) எண்ணுபவர்.

Numismatics: நாணயவியல்: நாணயம், பதக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து வரலாற்றைக் கணிக்கும் அறிவியல்.

Nut : (எந்.) திருகாணி : சதுரமான அல்லது அறுகோண வடிவமுடையதும், உலோகத்தில் அல்லது வேறு பொருளினாலானதுமான ஒரு சிறிய துண்டு. இதன் உள்புறத்தில் மரையாணியை ஏற்பதற்கான திருகிழைகள் அமைந்திருக்கும்.

Nutarbor or nut mandrel:(எந்.) ஆதார அச்சு : திருகாணிகளை வடிவமைப்பதற்குப் பயன்படும் சுழலும் முதன்மை ஆதார அச்சு.

Nut machine (பட்.) திருகாணிப் பொறி : ஒர் உலோகப் பட்டையிலிருந்து அல்லது உலோகத் தண்டிலிருந்து திருகாணிகளைத் தயாரிப்பதற்கு வெட்டவும். துளையிடவும், தட்டி விடவும் பயன்படும் ஓர் எந்திரம்.

Nut shanks : (பட்.) திருகாணித் துண்டு : பெரிய மரக்கைப் பிடிகளுடன் பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட திருகாணித்தண்டு அல்லது துண்டு.

Nylon : (குழை.) நைலான் : குழைமப் பொருள்களின் ஒரு குடும்பம். இதில் பல வகைகள் உண்டு. இரு காடி மூலங்களையுடைய கரிம அமிலங்களை டையாமின்களுடன் சேர்த்துச் செறிமானம் செய்வதன்