பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Obl

449

Obv


மூலம் ஒரு வகைப் பிசின் உண்டாகிறது. இந்தப் பிசின் கெட்டியானது; அதிக வெப்பத்தையும், உராய்வையும், வேதியியல் எதிர்ப்பையும் தாங்கக்கூடியது.

O

Oak : (மர.வே.) கருவாலி : பல நோக்கங்களுக்குப் பயன்படும் மரம். இது கடினமானது; நீண்ட நாள் உழைக்கக்கூடியது; வலிமை மிகுந்தது ; தட்ப வெப்ப மாறுபாடுகளைத் தாங்கக்கூடியது. அறை கலன்கள் தயாரிக்கவும், தளமிடுவதற்கும், உருச்செப்பமிடுவதற்கும் பயன்படுகிறது.

Oakum : (கம்மி.) : பழங்கயிற்றுச் சிலும்பு : பழங்கயிறுகளைப் பிய்த்துச் சிலும்புவாகச் செய்து கலப்பற்றகப் பயன்படுத்துவதற்கான பழங்கயிற்றுச் சிதைவு.

Obelisk : (க.க.) சதுரத் தூபி  : நான்முகக் கூர் நுனிக் கம்ப வடிவமைந்த மரம்.

Oblique projection : சாய்வுத் தளப் படிவாக்கம் : ஒரு பொருளின் முகம் பார்ப்பவருக்கு இணையாக வரும் வகையில் அமைக்கும் முறை. இதில் இந்த முன் முகத்திற்குச் செங்குத்தாகவுள்ள முகங்கள், முன் முகத்தின் அதே கோணத்திற்கும் அளவு கோலுக்கும் வரையப்படுகிறது இது. இந்தப் பண்புகளினால் இழைகளில் மட்டுமின்றி, எண்ணெய் வயல், கடல் போன்ற இடங்களிலும் எந்திரங்களில் இதனைப் பெருமளவில் பயன்படுத்த முடிகிறது.

Oblong : (கணி.) நீள் சதுரம் : உயரத்தைவிடக் குறுக்கு அகலம் மிகுதியாகவுடைய உருவம்,

Obscuration : (வண்.) மங்கலாக்குதல் : ஒரு வண்ணத்தின் அல்லது இனாமலின் மறைப்புத் திறன். ஒளி ஊடுருவாத வண்ணப் பொருளின் மறைப்பு ஆற்றல்.

Obsidian : (கனிம.) எரிமலைப் பாறை : எரிமலைக் கரும் பளிக்குப் பாறை. இது மிகவும் கடினமான பளபளப்பானது.

Obstruction light : (வானூ.) தடை விளக்கு : விமானங்கள் பறப்பதற்கு ஆபத்தான உயரத்தைக் குறித்துக் காட்டுவதற்கென வடி வமைக்கப்பட்ட சிவப்பு விளக்கு.

Obtuse : (கணி.) விரிகோணம் : கூர் விளிம்பற்ற கோணம். இரு செங்கோணத்திற்குக் குறைந்து ஒரு செங்கோணத்திற்குப் பெரிதான கோணம்.

Obverse : முகப்புப் பக்கம் : நாணயம், பதக்கம் ஆகியவற்றில் முகப்