பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ole

453

Omn


Oil line (தானி.) எண்ணெய் குழாய் அமைவு: மசகு எண்ணெய்க்கான சுற்று வழியினையுடைய குழாயும் அதனுடன் இணைந்த சாதனங்களும்,

Oi! pump: (தானி.) எண்ணெய் விசைக் குழாய், எண்ணெய் விசைக் குழாய்களில் பல்லிணை வகை, இதழ் வகை, குண்டல வகை எனப் பல வகை உண்டு. இவை பெரும்பாலும் எஞ்சினின் இணைபிரியா அங்கமாக அமைந்திருக்கும். சேமிப்புக் கலத்திலிருந்து எண்ணெயை மேல் மட்டங்களுக்கு இறைப்பதற்கு இவை பயன்படுகின்றன.

Oil stone (மர.வே.) சாணைக்கல் : கருவிகள் முதலியவற்றை கூர்மையாக்குவதற்கான எண்ணெய் ஊட்டப்பட்ட தீட்டுக்கல்.

Oil-tank vent: (வானூ.) எண்ணெய்க் கலப்புழை: எஞ்சினிலிருந்து எண்ணெய்க் கலத்திற்கு எண்ணெய் ஆவிகளைச் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பெரிய குழாய்.

Oil tannage : எண்ணெய் தோல் பதனிடல்: தோல் பதனிடுவதற்கான மிகப் பழைய முறை. இக்காலத்தில் சிலவகை எண்ணெய்களுடனும், மென் கொழுப்புகளுடனும், சேர்த்துப் பிசைந்து தோல் பதனிடப்படுகிறது. வரை மான் தோல், எருமைத் தோல், மான் தோல் ஆகியவற்றை பதனிட இம்முறை பயன்படுகிறது.

Oil varnish: (மர.வே.) எண்ணெய் வண்ண மெருகு: ஆளிவிதை எண்ணெய், மரப்பூச்செண்ணெய் போன்ற உலரும் எண்ணெய்களைக் கொண்ட வண்ண மெருகு. ஆக்சிகரணம் மூலமாக மெதுவாகக் கெட்டியாதல் நடைபெறுகிறது.

Öleaginous : (வேதி.) எண்ணய்ப் பசை: எண்ணெயின் இயல்புடையது.

Olefine: (வேதி.) ஒலிஃபைன்: எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வேதியியற்பொருள். -

Oleo gear: (வானூ.) எண்ணெய்ப் பல்லிணை: எண்ணெய் பூசக்கூடிய ஒரு சாதனம். இது ஒரு துவாரத்தின் வழியாகச் செல்லும் எண்ணெய் பாய்ந்து பல்லிணைக்கு மசகிடுகிறது.

Olive: தேவதாரு : மெதுவாக வளரும் ஒருவகை மரம், நெருக்கமான குருனைமணிகள் உடையது. கனமான்து. இளமஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அதில் அடர்பழுப்பு நிறப்புள்ளிகளும் பட்டைகளும் அமைந்திருக்கும். நுட்பவேலைப்பாட்டுப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது.

Omega: ஒமேகா: கிரேக்க நெடுங் கணக்கின் கடைசி எழுத்து

Omnigraph: தானியங்கிக் கத்தி: தானியங்கி அசிட்டிலின் கத்தி. இதில் ஒர் எந்திரமுனை அமைந்திருக்கும். அது கத்தியின் இயக்கத்திற்கேற்ப உருவங்களைச் செதுக்கும். இதன் உதவியுடன் ஒரே