பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Orn

456

Out


Ornithopter: (வானு.) ஆர்னித்தோப்டர்: ஒருவக ைவிமானம். இது காற்றைவிடக் கனமானது. படபட என்று அடிக்கும் சிறகுகள் உடையது.

Orometer: ஓரோ மானி: கடல் மட்டத்திற்கு மேல் உயரங்களைப் பதிவு செய்யக்கூடிய அனிராய்டு பாரமானி.

Orthographic projection: தொலைத் தோற்ற முறை: நிலப் படங்களில் உயர்ச்சியூட்டும் தெரலைத் தோற்றமுறை. இதில் முகப்புத் தோற்றம். மேல்முகத் தோற்றம், வலப்பக்க தோற்றம் முதலியவற்றைக் காட்டலாம்.

Ortho style: (க.க,) நேர் வரிசைத் தூண்: நேர்கோட்டில் தூண்களை அமைக்கும் முறை.

Oscillation: (க.க.) ஊசலாட்டம்: ஓர் ஊசலைப்போல் முன்னும் பின்னுமாக ஊசலாடுதல்; இருமுனைகளுக்கிடையே இங்குமங்குமாக அசைதல்.

Oscillator : அலைவி: மாறு மின்னோட்டம் உண்டாக்குவதற்குப் பயன்படும் உயர் அலைவெண் உள்ள ஒரு மின் சுற்றுவழி.

Oscillograph (மின்.) அலைவுப் பதிப்பி : தங்கப் பேனாக்களின் முள் நுனிகளிலும், அரிமானத்தை எதிர்க்கும் உலோகக் கலவைகள் உற்பத்தியிலும் பயன்படுத்தப்படும் ஒரு கருவி.

Osmosis : (இயற்) ஊடு கலப்பு: துளைகள் உள்ள இடைத் தடுப்புக்கள் வழியாகத் திரவங்கள் தம்முள் கலந்திடும் தன்மை.

Ottoman : சாய்மான இருக்கை : சாய்மானம் அல்லது கைகள் இல்லாத மெத்தையிட்டுத் தைத்த மெத்தை. இது முதலில் துருக்கியில் பயன்படுத்தப்பட்டது என்பர்.

Outboard motor : புறப் பொறி; கப்பலுக்கு அல்லது படகுக்கு வெளிப்புறத்தில் அமைக்கப் பெற்றுள்ள ஒரு பெட்ரோல் எஞ்சின், இதனை சிறிய படகுகளின் பின்புறத்தில் வேண்டும் போது பொருத்தி, வேண்டாத போது கழற்றி எடுத்துக் கொள்ளலாம். மிக வேகமாக ஓடும் பந்தயப்படகுகளில் இது பயன்படுத்தப்படுகிறது

Out let : (மின்.) மின் வடிகால் : மின் கம்பி அமைப்பில் எந்த ஒரு புள்ளியிலிருந்தும் நுகர்வுக்கு மின் விசையை எடுக்கலாம். அவ்வாறு மின்விசை எடுக்கப்படும் புள்ளியை மின்வடிகால் என்பர்.

Outlet box : (மின்.) மின் வடிகால் பெட்டி : மின் கம்பிக் காப்புக் குழாய் அமைப்பில் செருகப்பட்டுள்ள ஓர் இரும்புப் பெட்டி, இதிலிருந்து விளக்கு போன்ற ஒரு சாதனத்திற்கு மின் விசையை எடுக்கலாம்.

Out lined halftone : (அச்சு.) திண்ணிழல் உருப்படிவம் : இது ஒரு நுண் பதிவுப் படம், இதிலிருந்து ஒர் உருவத்தின் எந்தப் பகுதியை