பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ove

458

Oxy


முறையில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது குறைவான மசகிடல் காரணமாக ஏற்படலாம்.

Overload: (மின்.) மிகை மின் சுமை: ஒரு மின்னியல் சாதனத்தின் வழியாக இயல்பான அளவுக்கு அதிகமாக மின்னோட்டம் பாய்தல்.

Overload switch: (மின்.) மிகை மின் சுமைவிசை: ஒரு மின் கற்று வழியில் மிகையான மின் விசை பாயுமானால், மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை,

Overrunning clutch: (தானி.) விஞ்சியோடும் ஊடிணைப்பி: உள்ளும் புறமும் வளையங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஊடிணைப்பி. உள் ஊடிணைப்பில் பல முக்கோணவடிவக் காடிகள் வெட்டப்பட்டிருக்கும். அவற்றில் கடினமான எஃகு உருளைகள் செருகப்பட்டிருக்கும். இந்த அமைப்பின் மூலம் உள்வளையம் புறவளையத்தை உந்தித் தள்ளும். புறவளையும் உள்வளையத்தைவிட வேக இயங்குமானால், அது உள்வளையத்தை விஞ்சியோடும்.

Ovolo: (க.க.) கால்வட்டச் சித்திர வேலை: கால் வட்டவளை பகுதியுடைய சித்திர வேலைப்பாடு.

Oxalic acid (வேதி.) ஆக்சாலிக் அமிலம்: நச்சுத் தன்மை வாய்ந்த அமிலம், மரத்துTள், கடுங்காரச் சோடா, கடுங்காரப் பொட்டாஷ் ஆகியவற்றின் கலவையிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இது சலவை, சாயமிடுதல், காலிக்கோ அச்சு ஆகியவற்றில் முக்கியமாகப் பயன்படுகிறது.

Oxidation: (வேதி.) ஆக்சி கரணம்: ஒரு பொருளை வேதியியல் முறைப்படி ஆக்சிஜனுடன் ஒருங்கிணையும்படி செய்தல்

Oxide:(வேதி.) ஆக்சைடு: தனிமம் அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் ஆக்சிஜன் இணைந்த வேதியியற் பொருள்.

Oxidizing: ஆக்சிஜனேற்றுதல்: ஒர் அமிலக் கரைசல் மூலம் ஆக்சிஜனேற்றி ஒர் உலோக வேலைப் பாட்டுக்கு மெருகேற்றுதல்.

Oxidizing agent: (வேதி.) ஆக்சிஜனேற்று பொருள்: ஒரு பொருள் தன்னிடமிருக்கும் ஆக்சிஜனில் ஒரு பகுதியை உதறிவிட்டு இன்னொரு பொருளை ஒர் ஆக்சைடாகவோ வேறு கூட்டுப் பொருளாகவோ மாற்றுகிறது. இந்தப்பொருள் ஆக்சிஜனேற்று பொருள் எனப்படும்.

Oxidizing flame: ஆக்சிஜனேற்றுச் சுடர்: ஒரு வாயுப் பற்றவைப்புச் சுடர். இதில் முழுமையான உள்ளெரிதலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக ஆக்சிஜன் அமைந்திருக்கும்.

Oxyacetylenes (பொறி.) s ஆக்சி அசிட்டிலின்: மிகவும் சூடான சுடரை உண்டாக்கும் வகையிலான விகிதங்களில் ஆக்சிஜனும் அசிட்டிலினும் கலந்துள்ள ஒரு கலவை. உலோகவேலைத் தொழிலில் பற்ற