பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pea

465

Peb


பல்வேறு மாதிரிகளை அல்லது உருவரைகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் வார்ப்படம்.

Pattern shop : தோரணிப் பட்டறை : வார்ப்படங்கள் தயாரிக்கப் பயன்படுத்துவதற்கான மரத்தோரணிகளைத் தயாரிக்கும் பட்டறை.

Pavement : (க.க.) தள வரிசை: சாலை அல்லது ஓர் நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம்,

Pavilion : (க.க.) காட்சி அரங்கம்: முற்றிலும் சுவர்களினால் அடைக்கப்படாமல் கூடாரமிட்ட ஒப்பனைப் புறத் தாழ்வாரம். காட்சி அரங்காக அல்லது கேளிக்கை அரங்காக இது பயன்படும்.

Pay load : (வானூ.) வருவாய்ப் பகுதி : விமானத்தில் பயணிகள், சரக்குகள் போன்ற வருவாய் தரும் பாரத்தின் பகுதி.

Payne's process : தீத்தடைக் காப்பு முறை : மரத்தில் இரும்பு சல்பேட்டை ஊசிமூலம் செலுத்தி, அதன் பின் சுண்ணாம்புச் சல்பேட்டு அல்லது சோடா கரைசலை ஊசி மூலம் செலுத்தி தீத் தடைக்கசப்பு செய்யும் முறை.

Peak load ; (மின்.) உச்சமின் விசை : ஒரு மின்னாக்கி அல்லது மின் விசை உற்பத்தி அமைப்பு, 20மணி நேரத்திற்கு ஒரு முறை என்பது சீரான இடைவெளிகளில், மிக உயர்ந்த அளவு வழங்கும் மின் விசையின் அளவு.

Pearl: (வேதி.) முத்து: இது அரும் பொருள்களில் ஒன்று. முத்துச் சிப்பியில் கால்சியம் கார்போனேட் என்ற வேதியியற் பொருளினால் உண்டாகிறது.

Pearling: இழை முடிப் பூ வேலை: இழை முடிக் கண்ணியிட்டுச் செதுக்கிப் பூ வேலைப்பாடுகள் செய்தல்.

Pearlite; (உலோ ) பியர் லைட்: கார்பனும் இரும்பும் கலந்த எல்லாக் கலப்புக் கூறுகளையும் உடைய உலோகக் கலவை. இதில் 0.9% கார்பன் கலந்திருக்கும்.

Pear wood:பேரி மரம்: இளம் பழுப்பு நிறமுடைய, நெருக்கமான மணிக்கரண் அமைந்த ஒரு வகை மரம். மிதமான கடினத்தன்மையுடையது. வரைவாளர்கள் T-சதுரம், முக்கோணங்கள் முதலியவை செய்யப் பயன்படுகிறது.

Peat: (வேதி.) புல்கரி: ஒரளவு கார்பனாக்கிய தாவரக் கனிமப் பொருள். எரிபொருளாகப் பயன்படுகிறது. இதனைத் தோண்டியெடுக்கும்போது இதில் நீர்ச்சத்து மிகுதியாக இருக்கும். அதனால் இதனை அழுத்தி, உலர்த்தி எரி பொருளாகப் பயன்படுத்த வேண்டும்.

Pebble dash: (க.க.) கூழாங்கல் பதிப்பு: சாந்து அல்லது சிமென்ட்