பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Per

467

Per


Perforating; (அச்சு.) துளையிடல்: தாளில் முத்திரைகளுக்கான சூழ்வரிசைத் துளையிடுதல்; கிழிப்பதற்கு வசதியான துளை வரிசை,

Perforating machine: (அச்சு.) துளையிடு கருவி: தாளைக் கிழிப்பதற்கு வசதியாகத் தாளில் துளையிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Performance-type glider: (வானூ.) செயல்திறன் சறுக்கு விமானம்: மிக உயர்ந்த அளவு செயல்திறன் வாய்ந்த ஒரு சறுக்கு விமானம்,

Perimeter: (கணி.) சுற்றளவு: வட்டமான உருவின் சுற்றுவரை நீளம்.

Periodic arrangement: (வேதி.) எண்மானப் பட்டியல்: ஒத்த வேதியியற் பண்புகள் ஒரே ஒழுங்காகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட தனிமங்களின் அணு எண் படியான வரிசைப் பட்டியல்.

Peripheral speed: (எந்.) பரிதி வேகம்: ஒரு சக்கரம். அல்லது சுழல்தண்டு போன்ற உறுப்புகள் வட்டப்பரப்பின் சுற்றுக்கோட்டில் ஒரு நிமிடத்திற்குச் சுழலும் கழற்சிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் வேகம்.

Periphery: (கணி.)பரிதி: வட்டம், நீள்வட்டம் போன்ற உருவங்களின் வட்டப்பரப்பின் சுற்றுக் கோடு.

Periscope: புறக்காட்சிக் கருவி: நீர்மூழ்கிக் கப்பலின் முகட்டு மேற்பரப்புக் காட்சிக் கருவி, பாதுகாப்புக் குழியின் புறக்காட்சிக் கருவி,

Peristyle: (க.க.) சுற்றுத் தூண் வரிசை: கோயில், மடம், மண்டபம் முதலியவற்றைச் சுற்றிலும் உள்ள தூண் வரிசை.

Permanent load: (பொறி.) நிலைச் சுமை: எந்திரத்தில் அதன் கட்டமைப்புச் சுமை போன்ற ஒரு போதும் மாறாத நிலையான சுமையின் அளவு.

Permanent magnet. (மின்.) நிலைக் காந்தம்: ஒரு காந்த எஃகு தான் பெற்ற காந்த சக்தியை ஒரு போதும் இழக்காமல் ஒரு காந்தப் புலத்தின் ஆற்றலுடன் நிரந்தரமாக இருத்தி வைத்துக் கொள்கிறது. இக்காந்தம் நிலைக் காந்தம் எனப்படும்.

Permanganate:(வேதி.) பெர்மாங்கனேட்(HMnO4) : பெர்மாங்கனிக் அமிலத்தின் உப்பு. இது அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.

Permeability: (மின்.) கசிவுத் திறன்: ஊறி உட்புக இடந்தரும் திறன்.

Permutation: (கணி.) முறை மாற்றம்: ஒரு தொகுதியில் அடங்கிய பொருள்கள் ஒன்று மாற்றி ஒன்று வரிசை மாறும் ஒழுங்கமைவு.

Perpend: (க.க.) ஊடுகல்:சுவரின் ஒரு கல்லிலிருந்து மற்றொரு பக்கத் திற்கு அதனூடே செல்லும் கல்.